காபூல், செப். 11- ஆப்கானிஸ் தானில் தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் நிலை என்னவாகுமோ என்றொரு புறம் பன் னாட்டு சமூகம் அச்சம் தெரிவித்துக் கொண்டி ருக்க அச்சமில்லை அச்ச மில்லை என்ற தொனியில் ஆப்கன் வீதிகளில் பெண் கள் போராடக் கிளம்பி யுள்ளனர்.
அந்த வரிசையில், ஆப்கானிஸ்தானில் அரசியலில் பெண்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டத்தில் தலி பான்கள் தாக்குதல் நடத் தினர். இதில் சமூக செயற் பாட்டாளரான நர்கிஸ் என்பவரை தலிபான்கள் தாக்கியதில் அவருக்கு தலையில் அடிபட்டு ரத் தம் கொட்டியது. மேலும் பேரணியை கலைக்க வானை நோக்கி துப்பாக்கியால் தலிபான்கள் சுட்டனர்.
ஆப்கானில் அறிவிக் கப்பட்ட 33 பேர் கொண்ட அமைச்சரவை யில் ஒரு ஒரே பெண்ணுக் குக் கூட வாய்ப்பளிக்க வில்லை. ஆட்சி அதி காரத்தில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாது என்பதை தலிபான்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தும் இருந்தனர்.
இந்நிலையில் ஆப்க னில் நடந்த போராட்டத் தின் போது பெண் ஒருவர் தலிபானின் துப்பாக்கியை நேருக்கு நேர் எதிர்த்து நெஞ்சை நிமிர்த்து நிற்கும் ஒளிப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை ராய்ட் டர்ஸ் செய்தி நிறுவனத் தின் புகைப்படக்காரர் எடுத்துள்ளார். இது குறித்து ஆப்கானிஸ்தா னின் டோலோ செய்தி நிறுவனத்தின் செய்தியா ளர் ஜாரா ரஹிமி தனது சுட்டுரைப் பக்கத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்.
"தலிபான் துப்பாக்கி முனைக்குப் பயப்படாமல் நேருக்கு நேர் எதிர்கொள் ளும் ஆப்கன் பெண்" என்று அவர் எழுதி ஒளிப் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், இணையவாசிகள் பலரும் இந்த ஒளிப்படம் 1989இல் சீனாவின் தியான்மென் சதுக்கத்தில் ஜனநாயகப் போராளிகளை ஒடுக்க நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலின் போது டாங்கர் வாகனத்தை எதிர்த்துச் சென்ற ஒற்றை மனிதனை நினைவுபடுத் துவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment