இருசக்கர வாகன சர்வீசிலும் புதுமை காட்டும் ஓலா எலெக்ட்ரிக் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 30, 2021

இருசக்கர வாகன சர்வீசிலும் புதுமை காட்டும் ஓலா எலெக்ட்ரிக்

சென்னை, செப். 30- இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஓலா மின்சார ஸ்கூட்டர் விற்பனை துவங்கியது. விற்பனை துவங்கிய இரண்டே நாட்களில் ரூ. 1100 கோடி மதிப்பிலான இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதாக ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்தது.

புதிய மின்சார இருசக்கர வாகனங் களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அதிகாரப்பூர்வ விற்பனை மற்றும் சர்வீஸ் மய்யங்கள் எதுவும் திறக்கப்படாத நிலையில், விற்பனைக்கு பிந்தைய சேவைகளை ஓலா எலெக்ட்ரிக் எப்படி செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்து ஒள்ளது.

ஓலா எஸ்1 சீரிஸ் மாடல்களின் விற் பனை, இணைய முன்பதிவு மற்றும் விநியோகம் பற்றிய விவரங்களுடன் வழக் கமான சர்வீஸ் மற்றும் இதர சேவைகள் வாடிக்கையாளர்களின் வீட்டிலேயே செய்யப்படும் என ஓலா எலெக்ட்ரிக் வலைதளத்தில் குறிப்பிடப் பட்டு இருக் கிறது.

'ஓலா எஸ்1 / ஓலா எஸ்1 ப்ரோ மாடல்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் ஸ்மார்ட் வாகனங்கள் ஆகும். இவற்றை வழக்கமான வாகனங் களை போன்று 3-6 மாதங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்ய வேண்டிய அவசி யம் இல்லை. ஸ்கூட்டரில் எதையேனும் மாற்ற வேண்டுமெனில் ஸ்கூட்டரே உங்களுக்கு தகவல் கொடுக்கும்.'

'பின் ஓலா எலெக்ட்ரிக் செயலியில் அதனை தெரிவித்தால், ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் வீட்டிலேயே சரி செய்யப்படும். ஒருவேளை வீட்டில் இருந்தபடி சரிசெய்ய முடியாத சூழல் ஏற்பட்டால், வாகனம் கொண்டு செல்லப்பட்டு கோளாறு சரியானதும் வீட்டிற்கே கொண்டுவரப்படும்,' என ஓலா எலெக்ட்ரிக் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment