தலிபான் தலைவரை நேர்காணல் செய்த பெண் பத்திரிகையாளர் ஆப்கனிலிருந்து வெளியேறினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 1, 2021

தலிபான் தலைவரை நேர்காணல் செய்த பெண் பத்திரிகையாளர் ஆப்கனிலிருந்து வெளியேறினார்

காபூல், செப். 1- தலிபான் தீவிரவா திகளின் முக்கியத் தலைவரை கடந்த 17-ம் தேதி நேர்காணல் செய்த டோலோ தொலைக் காட்சி அலைவரிசையின் பெண் பத்திரிகையாளர் பேஹஸ்டா அர்கான்ட் நாட்டை விட்டு வெளியேறினார் என்று தக வல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் தலிபான் கள் பிடிக்குள் முழுமையாக வந்துவிட்டதால், இனிமேல் பெண் பத்திரிகையாளர்களுக்கு சுதந்திரம் இருக்காது, உயிருக்கு உத்தரவாதம் இல்லை என் பதை உணர்ந்த பஷேஸ்டா அர்காணட் ஆப்கனிலிருந்து வெளியேறியுள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் டோலோ சேன லில் அர்கான்ட் பணியில் சேர்ந் தார். ஆப்கனில் தலிபான்கள் பல்வேறு மாகாணங்களை கைப்பற்றியபின், தலிபான் களின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மவுலவி அப்துல் லாஹ் ஹேமத்தை கடந்த 17-ஆம் தேதி அர்கன்ட் நேர் காணல் செய்தார்.

பெண்களுக்கு எந்தவித மான உரிமையையும் வழங்காத தலிபான் தலைவரை அமர வைத்து ஒரு பெண் நேர்காணல் செய்தது உலகளவில் வைரலா னது. அதிலும் குறிப்பாக, “ கடந்த ஆட்சியைப் போல் காபூல் நகரில் வீட்டுக்கு வீடு சோதனை செய்யும் திட்டம் ஏதும் இருக்கிறதாஎன்று துணிச்சலாக தலிபான் தலை வரிடம் அர்கன்ட் கேட்டது பெரும் வரவேற்பைப் பெற்றது.

உலகளவில் தலிபான் தலை வர்களில் ஒருவரை முதன்முத லில் நேர்காணல் செய்த முதல் பெண் பத்திரிகையாளர் எனும் பெருமையை அர்கன்ட் பெற் றார். உலகளவில் அர்கன்ட் ஒளிப்படமும், தலிபான் தலை வரை நேர்காணல் செய்தகாட் சியும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் உலகளவில் புகழ்பெற்ற அர்கன்ட் தலிபான் கள் ஆட்சிக்கு அஞ்சி, ஆப்கனை விட்டு வெளியேறியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கனைவிட்டு அர்கன்ட் வெளியேறிவிட்டார் என்பது சிஎன்என் தொலைக்காட்சி உறுதி செய்துள்ளது. அர்கன்ட் அளித்த பேட்டியில்ஆப்கனில் பெண்களுக்கான பாதுகாப்பு மேம்படும் போது, பாதுகாப்பு சூழல் மேம்பட்டால் நான் திரும்புவேன். தலிபான்கள் ஆட்சிக்கு அஞ்சி லட்சக்கணக் கான மக்களைப்போல் நானும் என் தேசத்தைவிட்டு புறப் பட்டு விட்டேன்எனத் தெரிவித்தார்.

டோலோ தொலைக்காட் சியின் தலைநிர்வாக அதிகாரி சாத் மோஷேனி கூறுகையில்பெரும்பாலான புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள், செய்தி யாளர்கள் ஆப்கனைவிட்டு தலிபான்களுக்கு அஞ்சி வெளி யேறிவிட்டார்கள். இதனால் புதியவர்களை நியமித்துள் ளோம். தலிபான் தலைவரை அர்கன்ட் நேர்காணல் செய் தது வரலாற்றுச் சிறப்பு. அது மட்டுமல்லாமல் மலாலா யூசுப் பாயியையும் அர்கன்ட் இதற்கு முன் நேர்காணல் செய்துள் ளார். ஆப்கனில் முதன்முதலாக மலாலாவை நேர்காணல் செய்த தொலைக்காட்சி இதுதான்எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment