தமிழ்நாடு முதலமைச்சரின் அன்பு வேண்டுகோளுக் கிணங்க மலேசிய திராவிடர் கழகம் ரூ. 2 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளது. நன்கொடை தொகை யினை தமிழ்நாடு மாநில அரசு முதலமைச்சர் பொது நிவாரண நிதி (Government of State Tamilnadu CM's Public Relief Fund) வங்கிக் கணக்கிற்கு மலேசியாவி லிருந்து வங்கி மூலம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மலேசிய திராவிடர் கழகம் வழங்கியுள்ள நன்கொடை ரூ. 2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 27.8.2021 அன்று வரவு வைக்கப்பட்டது குறித்தும், அது பற்றிய விவரங்களையும் முதலமைச்சருக்கு கடிதமாக மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். வழங்கப்பட்ட நன்கொடை மலேசிய வாழ் தமிழர்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்களிடம் மலேசிய திராவிடர் கழகம் சேகரித்து அனுப்பியுள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட நன்கொடை குறித்து மலேசிய திரா விடர் கழகத்தின் தலைவர் ச.செ.அண்ணாமலை மற்றும் பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம் ஆகி யோர் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment