அமெரிக்க ராணுவத்தின் பயோமெட்ரிக் கருவிகள் தலிபான்கள் கையில் சிக்கின: உயிர் பயத்தில் ஆப்கான் மக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 2, 2021

அமெரிக்க ராணுவத்தின் பயோமெட்ரிக் கருவிகள் தலிபான்கள் கையில் சிக்கின: உயிர் பயத்தில் ஆப்கான் மக்கள்

காபூல், செப். 2- தலிபான் பயங்கரவாதி கள் கடந்த மாதம் 15ஆம் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானை யும் தங்கள் வசமாக்கிய நிலையில், ஏற்கெனவே அவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி 31.8.2021 அன்று அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ் தானை விட்டு முழுமையாக வெளி யேறியது. ஆப்கானிஸ்தானில் தலி பான் பயங்கரவாதிகள் கைப்பற்றி யதால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்கப் படைகள் அங்கு இருந்து வெளி யேறியதால் விமானங்கள், ஹெலி காப்டர்கள் உள்ளிட்ட ஏராள மான ராணுவத் தளவாடங்களை அங்கேயே விட்டு விட்டுச் சென் றன. அவை அனைத்தும் தற்போது தலிபான்கள் வசம் சென்றுள்ளது.

இந்த ராணுவத் தளவாடங்கள் மட்டுமின்றி அமெரிக்க ராணு வத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த பயோமெட்ரிக் கருவிகள் சிலவும் தலிபான்களின் கையில் சிக்கி இருப் பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்களுக்கான ஒப்பந்ததாரர்கள் மற்றும் உள்ளூரில் அமெரிக்க ராணுவத்தோடு பணிபுரிபவர்களை அடையாளம் காண, அந்த கருவி கள் பயன்படுத்தபட்டு வந்தன. அந்த வகையில் அந்த பயோமெட் ரிக் கருவிகளில் ஆப்கானிஸ்தான் மக்கள் பலரின் கை ரேகை, கண்விழி ரேகை மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட தரவுகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள் தற்போது தலிபான்கள் வசம் சென்றிருப்பதால் அதில் உள்ள தரவுகள் மூலம் தங்களுக்கு எதிராக செயல்பட்ட ஆப்கான் மக்களை அவர்கள் அடையாளம் காண கூடும் என அஞ்சப்படுகிறது. அப்படி அவர்கள் தங்களை அடை யாளம் கண்டால் தங்களின் உயி ருக்கே ஆபத்து ஏற்படலாம் என அமெரிக்க படைகளுக்கு ஆதரவு அளித்து வந்த ஆப்கான் மக்கள் பலரும் பயத்தில் உள்ளனர்.


No comments:

Post a Comment