இலங்கைத் தமிழர்கள் சட்டத்துக்கு விரோதமாக குடியேறியவர்கள் அல்லர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 3, 2021

இலங்கைத் தமிழர்கள் சட்டத்துக்கு விரோதமாக குடியேறியவர்கள் அல்லர்

அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்: வைகோ எம்.பி. வேண்டுகோள்

சென்னை, செப்.3- இலங்கை தமிழர்கள் சட்டத்துக்கு விரோதமாக குடியேறியவர்கள் அல்லர் என்றும், அவர்களின் விருப்பத்தை கேட்ட றிந்து குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் மறுமலர்ச்சி தி.மு.. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

வை.கோ. விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

1983ஆம் ஆண்டு, இலங்கையில் வெடித்த ஜூலை இனக்கலவரத் தின்போது தமிழர்கள் பலர் கொல் லப்பட்டனர். எனவே, உயிர்தப் புவதற்காக, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஈழத்தமிழர்கள், படகுகளில் இந் தியாவுக்கு வந்தனர். அவர்களுடன், மலையக தமிழர்களும் வந்தனர். அப்போது வந்த அனைவருமே, தமிழ்நாட்டில் 100 முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

அவர்களில், மலையக தமிழர் கள் சுமார் 28 ஆயிரம் பேர். இப் போது, அவர்களுக்கு பிறந்த குழந் தைகளையும் சேர்த்து, 45 ஆயிரம் பேருக்கு கூடுதலாக உள்ளனர். இந் தியக் குடியுரிமை சட்டத்தின்படி, இவர்கள் குடியுரிமை பெற தகுதி யானவர்கள். ஆனால், இவர்கள் அனைவருமே, அகதிகளாக வந்து குடியேறியவர்களாக கருதப்படு வதால், இவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுகின்றது.

சட்ட விரோதமாக வந்தவர்கள் என்றால், ரகசியமாக வந்திருக்க வேண்டும். ஆனால், போரின் காரணமாக அடைக்கலம் தேடி வந்தவர்கள். அரசு முறையாக வர வேற்று, ஆவணங்களில் பதிவு பெற்று, முகாம்களில் குடியமர்த்தப்பட்ட வர்கள். எனவே, இவர்கள் சட்ட விரோத குடியேறிகள் அல்ல. கடந்த 30 ஆண்டுகளாக, இந்திய, தமிழ்நாடு அரசுகளின் உதவிகளை பெற்று வருகின்றவர்கள்.

ஒருவர் பிறப்பின் அடிப்படை யில் குடியுரிமை பெறலாம். இந்தி யாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருப்பதால் குடியுரிமை பெறலாம். இங்கே உள்ளவர்களை திருமணம் செய்தவர்கள் குடி யுரிமை பெறலாம். இப்படி பல வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும், சட்டத்திற்கு எதிராக குடியேறி யவர்கள் என்று கூறி, அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுகின்றது. அவர்கள் சட்டவிரோத குடியேறி கள் அல்ல என அறிவித்து, இலங் கைத் தமிழர்களுடைய விருப் பத்தை கேட்டு அறிந்து, குடியுரிமை வழங்கவேண்டும். இந்தப் பிரச்சி னையில் தமிழ்நாடு அரசு, கூடிய விரைவில் தீர்வு காணவேண்டும். ஒன்றிய அரசை வலியுறுத்த வேண் டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அதில் கூறி யுள்ளார்.

No comments:

Post a Comment