லண்டன், செப். 30- கரோனா வைரஸ் தொற்று 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முதலாக சீனாவில் தோன்றி பரவினாலும், இன்றைக்கு 200-க்கு மேற் பட்ட நாடுகளில் பரவி உள்ளது.
கரோனா பாதிப்பு தொடர்பாக உலகமெங் கும் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படு கின்றன.
இங்கிலாந்தில் ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகம், பிரிஸ்டல் பல்கலைக் கழகம், நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் ஆகிய வற்றின் ஆராய்ச்சியாளர் கள் (கிளிப்ட்) ஒரு ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
அதன் முக்கிய தகவல் கள் வருமாறு:-
* புகை பிடித்தால் இதய நோய், புற்றுநோய் உள்பட பிற நோய்கள் பாதிப்பதுபோலவே கரோனாவும் தீவிரமாக பாதிக்க வாய்ப்பு இருக் கிறது. எனவே புகை பிடிப் பதை கைவிடுவதற்கு இது ஏற்ற தருணமாக இருக்கிறது.
* கடந்த ஆண்டு ஜன வரி மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி யில் 4 லட்சத்து 21 ஆயி ரத்து 469 பேரை ஆராய்ந் ததில் புகை பிடிப்பதற்கும், கரோனா தீவிரம் அடை வதற்கும் தொடர்பு இருப் பது தெரிய வந்துள்ளது.
* புகை பிடிக்காதவர் களுடன் ஒப்பிடுகையில் புகை பிடிப்போருக்கு கரோனா பாதிக்கிற போது, மருத்துவமனை யில் சேர்க்கிற வாய்ப்பு 80 சதவீதம் அதிக வாய்ப்பு உள்ளது. இவர்கள் இறக் கவும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அந்த ஆய் வுக் குறிப்பில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment