மும்பை, செப். 1- ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய பட்ஸ் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்போன் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரீமியம் அம்சங்கள் நிறைந்த இயர்போன் என்பதால் இதன் விலை சற்றே அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
அனைவராலும் வாங்க முடியாத விலையில், ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நிலையில், ஒன்பிளஸ் உருவாக்கி வரும் புது இயர்போன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. புது இயர்போன் ஏ.என்.சி. எனப்படும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இதன் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் பட்ஸ் இயர்போன் லைட் பிராண்டிங் கொண்டிருக் கும் என எதிர்பார்க்கலாம். இந்த இயர்போன் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
No comments:
Post a Comment