பெண்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் கண்காணிக்கவும் தமிழ்நாடு மாநில புதிய மகளிர் கொள்கை உருவாக்கப்படும் அமைச்சர் பி.கீதாஜீவன் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 2, 2021

பெண்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் கண்காணிக்கவும் தமிழ்நாடு மாநில புதிய மகளிர் கொள்கை உருவாக்கப்படும் அமைச்சர் பி.கீதாஜீவன் அறிவிப்பு

சென்னை, செப்.2 பெண்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், கண்காணிக்கவும் தமிழ்நாடு மாநில புதிய மகளிர் கொள்கை உருவாக்கப் படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் கீதாஜீவன் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று (1.9.2021) நடைபெற்ற மானியக் கோரிக் கை விவாதத்தில் உறுப்பினர்கள் பேசிய பிறகு, சமூக நலன்-மகளிர் உரி மைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், தனது துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-

மாநில மூத்த குடிமக்கள் கொள்கை

தமிழ்நாட்டில் 2030-ஆம் ஆண்டில் முதியோர்களின் எண்ணிக்கை 1 கோடி யாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள் ளது. இதை கருத்தில் கொண்டு, தமிழ் நாட்டில் முதியோர்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதை உறுதிசெய்யும் வகையில்மாநில மூத்த குடிமக்கள் கொள்கைஉருவாக்கப்படும். பெண் களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், கண்காணிக்கவும்தமிழ்நாடு மாநில புதிய மகளிர் கொள்கைஉருவாக்கப்படும்.

கைம்பெண்கள் உள்ளிட்டோர் சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காககைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்அமைக்கப்படும். தாம் பரத்தில் செயல்பட்டுவரும் சேவை இல்லத்தில் உள்ள கட்டடங்களைப் புதுப்பிக்கவும், பயிற்சி அளித்திட தேவையான தளவாட சாமான்களை வாங்கிடவும் ரூ.1.18 கோடி ஒதுக்கப்படும். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கான பயிற்சி மய்யம் ஆரம் பிக்கப்படும்.

தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம்

சத்துணவு திட்டத்தில் ஆயிரத்து 291 சத்துணவு மய்யங்களுக்கு ரூ.69 கோடியே 24 லட்சம் செலவில் சமையலறைகள் கட்டப்படும். ஆயிரம் சத்துணவு மய்யங்களில், மொத்தம் ரூ.80 லட்சம் செலவில் தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம் பொருத்தப்படும்.

கரோனா பாதிப்பால் நீண்ட நாள்களாக மூடப்பட்டிருந்த பள் ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது, உடல் நிறை குறியீட்டின்படி மாணவ, மாணவியரின் ஊட்டச்சத்து நிலையை 2 மாதங்களுக்குள் கண்டறிய ரூ.2 கோடி செலவில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 43 ஆயிரத்து 174 பள்ளிக ளில் பயிலும் 42 லட்சத்து 13 ஆயிரத்து 617 சத்துணவு பயனாளிகளுக்கு உடல் நிறை குறியீட்டு எண் கணக்கீடு செய் யப்படும். ஊட்டச்சத்து குறைபாடுகள் இருப்பின் அதை நிவர்த்திசெய்யும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்.

சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சிறுவர்களிடையே போதைப்பழக்கம் அதிகரித்து காணப் படுவதால், அங்கு போதை தடுப்பு மய்யங்கள் ரூ.76 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment