அறந்தாங்கி, செப்.8 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் விடுதலை வாசகர் வட்டம் இணைந்து நடத்திய மாபெரும் பெரியாரியல் பயிற்சி முகாமில் பங்கேற்று, தேர்வு எழுதிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் தேர்வு எழுதிய அனைவருக்கும் புத்தகங்கள் வழங்கும் விழா, அறந்தாங்கி கழக மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களுக்கு சான்றிதழ்களை பெரியார் மணியம்மை பல்கலைக் கழக சிந்தனை உயராய்வு மய்யமும், மாணவர்களுக்கான புத்தகங்கள், நன்கொடையாளர்கள், மாநில மகளிர் அணி செயலாளர், தகடூர் தமிழ்ச்செல்வி, புதுக்கோட்டை எஸ்டிபிஅய் கட்சியின் பொறுப்பாளர் ஆதம்பாவா, அறந்தாங்கி மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் சீரிய செயல்பாட்டாளர் ஆ.வேல்சாமி ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் பைந்தமிழ்ப்பாவலர் கவிஞர் சி.துரைமாணிக்கம் ஆகியோரின் நன்கொடைகள் மூலமாக புத்தகங்கள் தலைமைக் கழத்தில் வாங்கப்பட்டு, அனைத்து மாணவர்களுக்கும் அவர்களது இல்லத்திற்கே சென்று வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் ப. மகாராஜா, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ஆ. வேல்சாமி, மாவட்ட தலைவர் மாரிமுத்து ஆகியோருடன் மண்டல இளைஞரணிச் செயலாளர், வீரையா அவர்கள் ஒருங்கிணைப்பில், அனைத்து மாணவர்களின் இல்லங்களுக்கும் நேரில் சென்று சான்றிதழும் புத்தகங்களும் வழங்கி, மாணவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.
No comments:
Post a Comment