கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு,
என் வணக்கம். தாங்கள் முதன் முதலில் “பெரியார் உலகம்“ உருவாக்க ஒரு சவரன் (ரூ. 25,000) தங்கம் தாருங்கள் என்றபோது தங் களை என் வீட்டிற்கு வரவ ழைத்து 5 சவரன் (ரூ.1,25,000) தந்தேன். தொடர்ச்சியாக மூன்று மாதத்திற் கொருமுறை
1 சவரன் ரூ. 25,000 என தொடர்ந்து 12 சவரன் கொடுத்து மொத்தம் 17 சவரன் ரூ. 4,25,000 தந்துள்ளேன்.
மீண்டும் தங்களின் “பெரியார் உலகம்“ உருவாக்கி முடிக்க நன்கொடை கேட்டு இருப்பதால் வரும் பெரியார் பிறந்த நாளன்று ரூ. 75,000 கொடுத்து என் நன்கொடையை ரூ. 5,00,000 என ஆக்கிக் கொள்வதுடன் - வரும் மாதங் களில் தொடர்ந்து 40 முறை ரூ. 10,000/- கொடுத்து முடித்து மார்ச்சு 1, 2025 அன்று என் தந்தை “பெரியார் பெருந் தொண்டர்” செய்யாறு வேல்.சோமசுந்தரம் அவர்களின் நூற்றாண்டு விழா நினைவைப் போற்றும் வகையில்
ரூ. 1,00,000 தந்து “பெரியார் உலகத்”திற்கான என் நன் கொடை ரூ. 10,00,000 என்று தருகிறேன் என்பதை பணி வுடனும் பெருமையுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன்
சென்னை-10
No comments:
Post a Comment