வீட்டுக்கு வீடுநாமும் விழா எடுத்தே
வீதியெங்கும் பெரியாரைப் பாடி நிற்போம்!
போட்டுவிட்டார் ஆணையினை முதல்வர் ஸ்டாலின்!
பூத்ததுவே வரலாற்றில் பொன்னாள் இன்றே!!
வேட்டுந்தான் வெடிப்போமே! விடியல் கண்டோம்!!
விளைந்ததுபார் சமூகநீதி எங்கும் இங்கே!!
ஏட்டுக்குள் அடங்காத புகழின் தந்தை
எம்பெரியார் சாதனையை எடுத்துச் சொல்வோம் !
ஆட்சிக்கு வந்தநாளில் தொடக்கம் கண்டே
அடுக்கடுக்காய் மக்களுக்காய்த் திட்டம் போட்டு
மீட்சிதனைக் காணுதற்கே செய்தார் சட்டம்!
மிகையில்லை திராவிடந்தான் வென்ற திங்கே!!
காட்சிக்குச் சிலையொன்றைத் தெருவில் வைத்தே
கலகத்தால் பேதங்கள் வளர்க்குந் தீயோர்
நாட்டிற்குள் தலைதூக்க நினைக்கும் வேளை
நாட்டிநின்றார் 'சமூகநீதி நாளை' இன்றே!
அண்ணாவும் கலைஞருமே சென்ற பாதை
அணுவளவும் பிசகாமல் பதித்தார் காலை!!
மாண்புமிகு வரும்போகும் என்று ணர்ந்தே
மானமிகு வாகிநிற்கும் ஸ்டாலின் வாழ்க!
சான்றோனாய்த் தன்மகவைக் கண்ட தாய்போல்
தான்தழுவி 'ஆசிரியர்' வாழ்த்தி நின்றார்!!
தேன்தமிழால் வாழ்த்திடுவோம் ஸ்டாலின் வாழ்க!
திராவிடர்தம் நெஞ்சமெல்லாம் நிலைத்தே வாழ்க!
- சுப.முருகானந்தம், மதுரை -
No comments:
Post a Comment