சென்னை, செப். 8- மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரி யர் எம்.எச்.ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
தலைநகர் டில்லியில் கடந்த வாரம் சபியா சைஃபி என்ற பெண் காவல் அதிகாரி நான்கு நபர்களால் பாலியல் கூட்டு வன்முறை செய்யப்பட்டதுடன் 50 இடங்களில் வெட்டப்பட்டும், மார்பகங்களை அறுத்தும் படு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தக் கொடூரச் சம்பவம் நடைபெற்று ஒரு வாரகாலமாகி யும் இதுவரை யாரும் கைது செய்யப்படாதது வெட்கத்திற் குரியது. டில்லியின் காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒன்றிய அரசு மெத்தனப்போக்குடன் செயல் படுவதே இதற்குக் காரணம்.
சபியாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். இது போன்று மற்றொரு பெண் பாதிக்கப்படக்கூடாது என்றால் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து சட்ட நடவடிக் கைக்கு உட்படுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கி றேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment