பாலியல் வன்முறை-சாமியார் சிவசங்கர் பாபாமீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 3, 2021

பாலியல் வன்முறை-சாமியார் சிவசங்கர் பாபாமீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு

சென்னை, செப். 3- சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ உட்பட இரண்டு வழக்குகளை சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர் பதிவு செய் துள்ளனர்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பல்வேறு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த னர். மாணவிகளின் பாலி யல் குற்றச்சாட்டை அடிப் படையாக வைத்து சி.பி. சி.அய்.டி காவல்துறையினர் மூன்று போக்சோ வழக்கினை சிவசங்கர் பாபா மீது பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், இம்மூன்று போக்சோ வழக்குகள் தொடர்பான விசாரணை யையும் சி.பி.சி.அய்.டி காவல்துறையினர் மேற் கொண்டு வருகின்றனர்.

இந்த 3 போக்சோ வழக்குகளில் முதல் வழக்கு சம்மந்தமான 300 பக்க குற்றப்பத்திரிகையை யும்  சி.பி.சி.அய்.டி காவல் துறையினர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில், மீதமுள்ள இரண்டு போக்சோ வழக்கிற்கு உண்டான குற்றப்பத்திரி கையை தாக்கல் செய்யும் பணியில் சி.பி.சி.அய்.டி காவல்துறையினர் ஈடு பட்டு வருகின்றனர். இதற்கிடையே சிவசங்கர் பாபா தான் ஆண்மையற் றவர் என்ற மருத்துவ சான்றிதழைக் காட்டி பிணை கோரி உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த மனுவை, வெளிநாட்டில் வாழும் அவரின் வாரிசு களை சுட்டிக்காட்டி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் சிவசங் கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ உட்பட இரண்டு பாலியல் வழக் குகளை சி.பி.சி.அய்.டி காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். சுஷில் ஹரியின் முன்னாள் மாணவி ஒருவருக்கும், முன்னாள் மாணவியின் தாயிற்கும் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் வழக்குகளை பதிவு செய்துள்ளதாக சி.பி.சி. அய்.டி காவல்துறையினர் சார்பில் தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் சிவசங்கர் பாபாவை கைது செய்யும் பணியில் காவல்துறையி னர்  ஈடுபட்டு வருவதா கவும் தகவல் வெளியாகி யுள்ளது.

No comments:

Post a Comment