சென்னை, செப். 30- இந்துஸ் தான் சேம்பர் ஆஃப் காமர் ஸின் 75ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் சென்னை யில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பட்டய கணக்காளர் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் கேபிடல் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே.சுரேஷ், 2021-2022ஆம் ஆண்டுக்கான இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பட்டய கணக்காளர் கே. சுரேஷ் முதல்நிலை அதிகாரி யாக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்து எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். அரசு நிறு வனத்தின் செயல்பாட்டைக் கற்றுக்கொண்ட கே. சுரேஷ் தனியார் நிறுவனமான ஆப் பிள் கிரெடிட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் சேர்ந்தார்,
அங்கு அவர் நிலையான வைப்பு, கார்ப்பரேட் கணக்கு கள் மற்றும் கடன் துறைகளில் துணைத் தலைவராக பணி யாற்றினார்.
அதன் பின்னர் இந்தியா சிமெண்ட்ஸ் கேப் பிட்டல் நிறுவனத்தில் நிதி கட்டுப்பாட் டாளர் மற்றும் நிறுவன செய லாளராக பணி புரிந்த அவர் அங்கு பல்வேறு துறைகளில் நிறைய சீர்திருத் தங்களை ஏற்படுத்தினார் என இந் நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment