ஈயம் கலந்த பெட்ரோல் பயன்பாடு முடிவுக்கு வருகிறது: அய்.நா.,அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 2, 2021

ஈயம் கலந்த பெட்ரோல் பயன்பாடு முடிவுக்கு வருகிறது: அய்.நா.,அறிவிப்பு

 நியூயார்க், செப். 2- மிகவும் மாசு ஏற்படுத்தும் ஈயம் கலந்த பெட்ரோலை கார்கள், லாரிகளுக்கு பயன்படுத்தும் நாடுகள் தற்போது உலகில் எதுவும் இல்லை என அய்.நா.,வின் சுற்றுசூழல் திட்டப் பிரிவு அறிவித்துள்ளது.

வாகனங்களின் இயந்திர செயல் திறனை மேம்படுத்துவதற்காக 1920-களில் பெட்ரோலுடன் ஒரு வகை ஈயத்தை கலக்கத் தொடங்கினார். அதனால் வாகனங்களின் செயல்திறன் கூடியது. ஆனால் மனிதர்களின் உடல் நலம் குன்றியது. இதயநோய், பக்க வாதம், புற்றுநோய், குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிப்பு என ஏகப் பட்ட பிரச்சினைகள் உருவாகின. நிலம், நீர், காற்று என அனைத்தும் ஈய பெட்ரோலால் மாசடைந்தன. இருப் பினும் 1970-கள் வரை, சுமார் அரை நூற்றானடுகாலம் உலகளவில் அனைத்து நாடுகளிலும் பெட்ரோலில் ஈயம் கலக்கப்பட்டது.

அதன் பின்னரே அதன் விளைவு கள் தெரிய ஆரம்பித்து பணக்கார நாடுகள் அதனை 1980களில் கைவிட் டன. 2000-ஆம் ஆண்டில் சுமார் 86 நாடுகள் ஈயப் பெட்ரோலை பயன் படுத்தி வந்தன. இந்தியா அதே காலக் கட்டத்தில் அவ்வகை பெட்ரோலை தடை செய்தது. அதன் பின்னர் பெரும்பாலான நாடுகளும் அவ்வகை பெட்ரோலை தடை செய்துவிட்டன. கடந்த 10 ஆண்டுகளில் ஈராக், ஏமன், அல்ஜீரியா உள்ளிட்ட சொற்ப நாடுகள் மட்டுமே இத்தகைய நச்சு பெட் ரோலை வழங்கின. இந்நிலையில் கடைசி நாடாக அல்ஜீரியாவும் கடந்த ஜூலையில் அவற்றை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது.

இது குறித்து அய்.நா., பொதுச் செயலர் அன்டனியோ குட்டரெஸ் கூறியதாவது: ஈயம் கலக்கப்பட்ட பெட்ரோல் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்திருப்பது ஒரு பன் னாட்டு வெற்றிக் கதை. இதன் மூலம் இதயநோய், புற்றுநோய் போன்ற வற்றால் ஏற்படும் 10 லட்சம் முன் கூட்டிய இறப்புகளை தடுக்கும். மேலும் இது குழந்தைகளின் அய்.க்யூ பாதிக்கப்படுவதையும் தடுக்கிறது. என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment