தந்தை எவ்வழி-அவ்வழி தனயன்! கலைஞரும்-தளபதியாரும்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 11, 2021

தந்தை எவ்வழி-அவ்வழி தனயன்! கலைஞரும்-தளபதியாரும்!!

காலையில் எழுந்ததும் ஒரு காபி அருந்திக் கொண்டே, ஒன்றிரண்டு நாளிதழ்களைப் படிப்பது என்பது ஒரு தனிசுகம் தான்; தொலைக் காட்சிகளும், வலைதளக் காட்சிகளும், சமூக ஊடகங்களும் எவ்வளவு தான் புழக்கத்தில் வந்தாலும் டீக்கடைப் பெஞ்சில் உட்கார்ந்து, பேப்பர் படிப்பது எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும் என்பது அதை அனுபவித்தவர்களுக்கே தெரியும். அந்தச் சுகத்தை அனுபவித்தவனும் அனுபவித்துக் கொண்டிருப்பவனும் நான் என் பதைத் தன்னடக்கத்தோடு பகிர ஆசைப்படுகி றேன்.

அவ்வாறே கடந்த 29.05.2021 காலை வழக்கம் போலத் தமிழ்நாளிதழொன்று படித்து, தொடர்ச்சியாக ஆங்கிலப் பத்திரிகையைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் கரோனா நோய்த் தொற்றால் பள்ளியைவிட்டு விலகிய, இடை நிறுத்தம்செய்த பள்ளிப் பிள்ளைகளைக் கணக்கு எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவித்துள்ளதாகத் தலைப்பு இட்டுவந்திருந்த செய்தியைத் தொடர்ந்து படித்தேன். செய்தியோடு இரு கல்வியாளர்கள் கூறிய செய்தியும் வெளியிடப்பட்டிருந்தது.

கணக்கெடுப்பு என்பது பெயரளவில் இல்லாமல் தமிழ்நாடு அரசு வீடுவீடாகச் சென்று, பள்ளி செல்லும் குழந்தைகளில் எத்த னைப்பேர் கரோனா நோயால் பெற்றோரை இழந் தவர், பெற்றோர் இருவரில் ஒருவரை மட்டும் இழந்தவர், அவ்வாறு இழந்த குழந்தைகள் தற் போது யார் பாதுகாப்பில் உள்ளனர், அவர்களு டைய பொருளாதார நிலைமை, அவர்களின் உடனடித்தேவை ஆகியவற்றையும் கண்டறிய வேண்டும். கேரள மாநில அரசு அறிவித்தது போல அவர்கட்கு இலவசக்கல்வி, நிதிஉதவி போன்றவற்றையும் அளிக்கமுன்வரவேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டதாகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

என்ன ஆச்சரியம்! மறுநாள் காலை 30.05.2021அன்று முன்னணி நாளிதழின் முதல்பக்கத்தில், தமிழ்நாட்டில் ரூ. 5லட்சம்: முதலமைச்சர் மு..ஸ்டாலின் என்ற தலைப்பில் கரோணாவால் பெற்றோரை இழந்த குடும்பங் களின் எதிர்காலப் பராமரிப்பு குறித்துத் தலை மைச் செயலகத்தில் சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்திய முதலமைச்சர் மு..ஸ்டாலின், உடன் அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் எனும் அடிக்குறிப்புடன் படம் வெளியாகியிருந்தது. மேலும் பெற்றோரை இழந்த குழந்தையின் பெயரில் ரூ. 5 இலட்சம் வைப்பீடு, அரசு இல்லம் மற்றும் விடுதிகளில் தங்க முன்னுரிமை, . பட்டப்படிப்பு

வரை கல்வி மற்றும் விடுதிக்கட்டணம் ஏற்பு, அல்லது உறவினர், பாதுகாவலர் ஆதரவில் குழந்தை வளர்க்கப்பட்டால் மாதந்தோறும் ரூ. 3000 உதவித்தொகை, பெற்றோரில் ஒருவரை இழந்து  தற்போது மற்றொருவரையும் இழந்தால் அவருக்கும் ரூ. 5 இலட்சம் வைப்பீடு, இவற் றைக் கண்காணிக்க மாவட்டம்தோறும் கண் காணிப்புக் குழு, அனைத்து அரசு நலத்திட்டங் களிலும் முன்னுரிமை. இந்நிவாரண உதவிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்றவாறு வழங்க நெறிமுறைகள் வகுத்து வெளியிட நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் வழிகாட்டுதல் குழு என ஒன்பது அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் செய்தி வெளியாகி யிருந்தது. நாளிதழ் செய்தியைத் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் படித்திருக்கிறார்; படித்த ஒரு சில மணி நேரத்திற்குள் உயர் அதி காரிகளுடன் கலந்து ஆலோசித்து நலத்திட்டங் களை அறிவித்திருக்கிற தாயுமானவர் தமிழ் நாடு முதலமைச்சர் தளபதியாரின் மனிதநேய மிக்க அன்புள்ளம் மக்களாட்சி மாண்புக்கு ஓர் எடுத்துக்காட்டு எனலாம். என் நினைவலைகள் கடந்த23 ஆண்டுகளுக்கு முன்னால் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் நடந்த ஒருசில நிகழ்வுகளை அசை போடத் தொடங்கியது. அப்பொழுது நான்கில்டு ஆப் சர்வீஸ்என்ற சமூக சேவை நிறுவனம் நடத்திய அரசு உதவி பெறும்செனரல் கரியப்பாமேனிலைப் பள்ளி யில் தலைமையாசிரியராகப் பணியாற்றுகிறேன். 11.6.1998 அன்று ஒருநாளிதழின் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவ துண்டோ? என்ற தலைப்பில் என் பள்ளியில் படித்து, மேனிலைக்கல்வியில் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவி குறித்த ஒரு செய்தி வெளியானது. அச்செய்தியின் முதல் பத்தியில், பிளஸ் டூ தேர்வில் தொழில் பயிற்சிக் கல்விப் பாடத்தில் மாநிலத்தில் முதலாவது இடம் பெற்ற மாணவி ஜி. தனலட்சுமிக்கு நிச்சயம் அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்துவிடும். அந்த அளவுக்கு அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். கைக்கு எட்டும் தூரத்தில் படிக்க நல்ல வாய்ப்பு இருந்தும்கூட , அதனை எட்டிப்பிடிக்க முடி யுமா என்ற ஏக்கத்தில் அவர் உள்ளார். குடும்பத் தின் வறுமையே இதற்குக் காரணம் என்று அம் மாணவியின் நிழற்படமும் போடப்பட்டிருந்தது. சாலிக்கிராமத்தில் உள்ள செனரல் கரியப்பா மேனிலைப்பள்ளியில் பிளஸ் டூ வகுப்பில் சேர்ந்தார். இவரது குடும்பச்சூழ்நிலையைக் கருதி அப்பள்ளி நிர்வாகம் இம்மாணவியிட மிருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. மாணவியின் விடா முயற்சி காரணமாக பிளஸ் டூ தேர்வில் டிராப்ட்ஸ்மேன் (சிவில்) பாடப்பிரி வில் 600க்கு 594 மதிப்பெண்கள் பெற்று மாநிலத் திலேயே முதலிடம் பெற்று அப்பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார் எனவும் குறிப்பிடப் பட்டிருந்தது.

இச்செய்தியைத் தொடர்ந்து, 14.06.1998 அன்றைய நாளிதழில், தனலட்சுமி படிப்புச் செலவை அரசே ஏற்கும் எனத் தலைப்பிட்டு, முதற்பக்கத்தில் வெளியான செய்தியில், ஏழை மாணவி தனலட்சுமியின் உயர்படிப்புச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் கலைஞர் அறிவித்தார். ;நல்ல தோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?என்ற தலைப்பில் கடந்த 11ஆம் தேதி நாளிதழில் செய்தி வெளி யானது. எனக் குறிப்பிட்டதோடு கலைஞர் முன்தொகையாகக் கொடுத்த ரூ. 5000க்கான காசோலை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் பட மும் வெளியாகியிருந்தது பத்திரிகை செய்தி பார்த்து உடன் நடவடிக்கை எடுத்து அம் மாணவிக்கு உதவிய அந்நாள் முதலமைச்சர் கலைஞர், தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் புகழப்பட்டார்.

மாணவி தனலட்சுமி பொறியியற் கல்லூரி யில் ஓராண்டு முடித்து இரண்டாம் ஆண்டு செல்கிறார். இவ்வாண்டுக்கான கல்விக்கட்ட ணத்தை அரசு செலுத்தாமல் காலம் கடத்திய சூழலில் ஓராண்டு கழிந்து, 14.06.1999 அன்று அதே நாழிதழில், கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத அரசின் கல்வி உதவி என்ற தலைப்பில், ஏழை மாணவி தனலட்சுமியின் உயர் படிப்புச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கடந்த ஆண்டில் அறிவித்தார். ஆனால் பள்ளிக் கல்வித் துறையிடமிருந்து அவருக்கு வழங்கப் பட வேண்டிய படிப்புதவித் தொகை இன்னமும் கிடைத்தபாடில்லை என்று செய்தி வெளியிடுகிறது.

என்ன ஆச்சரியம்? அடுத்த நாள் 15.06.1999 அதே நாளிதழில், மாணவிக்கு உதவித்தொகை; முதலமைச்சரின் உடனடி நடவடிக்கை என்ற தலைப்பில்,சென்னை ஜூன் 15-ஏழை மாணவி தனலட்சுமிக்கு வழங்கப்படாமல் இருந்த கல்வி உதவித்தொகை செவ்வாய்க்கிழமை வழங்கப் பட்டது. இதனை வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்குக் காரணமான அரசு அலுவலர் மீது துறை மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. எனசெய்தி வெளியானபோது பத்திரிகை செய்தியைப் பார்த்து, முதலமைச்சர் கலைஞர் எடுக்கும் நடவடிக்கைகளைப் பாராட்டாதவரே இல்லை எனலாம். இப்படி எல்லாம் கூட நடக்குமா? என்று வியப்பு மேலிட்ட நமக்கு அடுத்த மறுநாளான ஜூன் 17ஆம் தேதி, இதே நாளிதழில், பத்திரிகைகளே உண்மையான எதிர்க்கட்சி:முதலமைச்சர் என்ற தலைப்பில் வெளியான செய்தி பத்திரிக்கை தர்மத்திற்கான இலக்கணத்தையும் மக்களாட்சி மாண்புக்கான முதலமைச்சரின் பண்பினையும் அறிய வாய்ப்பு தந்தது என்றால் மிகையாகாது. அப்பத்திரிகை செய்தியில் ஒருசில பத்திகளை அவ்வாறே கீழே தந்துள்ளேன்.

திருச்செங்கோடு, ஜூன் 17 பத்திரி கைகள்தான் குறைகளைச் சுட்டிக்காட்டும் உண்மையான எதிர்க்கட்சித் தலைவர் என முதலமைச்சர் கலைஞர் கூறினார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள சிறுமவுசியில் வியாழக்கிழமை மாலை அத் தனூர் சமத்துவபுரங்களைத் திறந்து வைத்து அவர் பேசியதாவது:

"நலத்திட்டங்கள் மக்களை எட்டாமல் போனதற்குக் காரணம் ஊழலும் மதவாதமும் என்பது என்னுடைய கருத்து;இங்கொன்றும் அங்கொன்றுமாக இந்த ஆட்சியில் குறைகள் இருக்கலாம்;அவை சுட்டிக்காட்டப்பட்டால் உடனே களையப்படும்;பத்திரிகைகள்தான் குறைகளைச் சுட்டிக் காட்டிடும் எதிர்க்கட்சிகள்; நாளிதழில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. கடந்த ஆண்டு ஒரு மாணவிக்கு படிப்பு செலவுத்தொகை ரூ. 5000 வழங்கப்பட்டு பாக்கித் தொகை வழங்கப்படவில்லை எனச் செய்தி வெளிவந்திருந்தது. விசாரித்ததில் அது அதிகாரியின் தவறு எனத் தெரிய வந்தது. கடந்த ஆண்டு தொகையையும் சேர்த்து அந்த மாணவிக்கு வழங்கப்பட்டது. தவறு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது."

இவ்வாறு பத்திரிகைகள் சுட்டிக்காட்டி, நிவர்த்தி செய்யப்பட்ட மேலும் சில நிகழ்வு களையும் அந்த கூட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள். 29.5.2021 அன்று ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தி அறிந்த இந்நாள் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அமுத சுரபியாய் அள்ளி வழங்கியிருக்கின்ற நல உத வித்திட்டங்களைப் பார்க்கும்போது 17.06.1999 அன்று நாளிதழில் வெளியான பத்திரிகைகளே உண்மையான எதிர்க்கட்சி என அந்நாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர், பத்திரிகை செய்தியைப் பார்த்து ஏழை மாணவி தன லட்சுமியின் உயர்கல்விக்கு உதவிய கருணைக் கடலான அவரின் மாண்பினை அறிய முடி கிறது. சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே எனும் புறநானூற்றுப் புலவன் கூற்றி னைச் சான்றாக்கியிருக்கும் தந்தை (கலைஞர்) எவ்வழி அவ்வழிதானே தனயனும் (தளபதி யார்)! என்பது வரலாறு கூறும் செய்தியாய் வருங்காலம் பேசும் என்பதில் புகழ்ச்சி இல்லை: உண்மை.

அவ்வாறேமகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான்கொல் எனும் சொல்எனும் குறள் கூற்றினுக்கு வாழும் இலக் கணமாய் - எடுத்துக்காட்டாய்த் தமிழ்நாட்டின் முதலமைச்சராய்ப் பொறுப்பேற்று, இத்தள பதியாரைப் பெற்றெடுக்க இவர் தந்தை என்ன தவம் செய்திருப்பாரோ என்ற சொல்லுக்குத் தக்கவராய் விளங்குகிறார் என்பதில் தமிழ் நாடும் பெருமை கொள்கிறது என்பது உண்மை யிலும் உண்மை.

- முனைவர் முருகையன் பக்கிரிசாமி

துணைத்தலைவர்,

பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை

No comments:

Post a Comment