பாரதிக்கு விழா எடுக்கும் பாரதி அன்பர்களே, இந்த பாரதி பாட்டுகளை ஏன் மறந்தீர்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 11, 2021

பாரதிக்கு விழா எடுக்கும் பாரதி அன்பர்களே, இந்த பாரதி பாட்டுகளை ஏன் மறந்தீர்?

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்

               சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்

பித்த மனிதர், அவர் சொலுஞ் சாத்திரம்

               பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்!

(பக்கம் 224)

'உயிர் பெற்ற தமிழர் பாட்டு' என்ற தலைப்பில்,

மனிதரில் ஆயிரம் ஜாதி - என்ற

               வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை;

கனிதரும் மாமரம் ஒன்று - அதில்

               காய்களும் பிஞ்சுக் கனிகளும் உண்டு.

 

பூவில் உதிர்வதும் உண்டு - பிஞ்சைப்

               பூச்சி அரித்துக் கெடுவதும் உண்டு

நாவிற் கினியதைத் தின்பார் - அதில்

               நாற்பதி னாயிரம் ஜாதிகள் சொல்வார்.

 

ஒன்றுண்டு மானிட ஜாதி - பயின்று

               உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்;

இன்று படுத்தது நாளை - உயர்ந்

               தேற்றம் அடையும் உயர்ந்த திழியும்.

 

நந்தனைப் போல்ஒரு பார்ப்பான் - இந்த

               நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின்,

எந்தக் குலத்தின ரேனும் - உணர்

               வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.

 

அய்ந்து புலனை அடக்கி - அரசு

               ஆண்டு மதியைப் பழகித் தெளிந்து,

நொந்து சலிக்கும் மனதை - மதி

               நோக்கத்திற் செல்ல விடும்வகை கண்டோம்.

உண்மையின் பேர்தெய்வம் என்போம் - அன்றி

               ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்

உண்மைகள் வேதங்கள் என்போம் - பிறிது

               உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.

 

கடலினைத் தாவும் குரங்கும், - வெங்

               கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,

வடமலை தாழ்ந்தத னாலே - தெற்கில்

               வந்து சமன் செயும் குட்டை முனியும்,

 

நதியி னுள்ளேமுழு கிப்போய் - அந்த

               நாகர் உலகிலோர் பாம்பின் மகளை

விதியுற வேமணம் செய்த- திறல்

               வீமனும் கற்பனை என்பது கண்டோம்.

 

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும் - ஒன்றில்

               உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்

நன்று புராணங்கள் செய்தார் - அதில்

               நல்ல கவிதை பலபல தந்தார்

 

கவிதை மிகநல்ல தேனும் - அக்

               கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;

புவிதனில் வாழ்நெறி காட்டி - நன்மை

               போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.

(பக்கங்கள் 575, 576)

(ஆதாரம்: மகாகவி பாரதியார் கவிதைகள்

சக்தி வெளியீடு - சென்னை (1957)

No comments:

Post a Comment