டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாய அமைப்புகளின் போராட்டம், உபி தேர்தலில் பாஜகவிற்கு பின்னடவை ஏற்படுத்தும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
· கேரளா மாநிலத்தைத் தொடர்ந்து, கடை, வணிக வளாகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அமர இருக்கை தரப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் மசோதா வரவேற்கத்தக்கது என்கிறது தலையங்க செய்தி.
தி டெலிகிராப்:
· பெகாசஸ் ஒட்டுக் கேட்பு வழக்கில் விளக்கம் அளிக்க இன்னும் கூடுதல் அவகாசம் வேண்டும் என ஒன்றிய அரசின் வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு.
· சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவுக்கு, சிவில் அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளன.
· தலிபான்களைப் பற்றி பேசுகையில் பிற மதங்களின் தீவிர கூறுகள் பற்றி குறிப்பிட்டதற்கு எதிராக சில அமைப்புகளின் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், நடிகர் நசீருதீன் ஷா மற்றும் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ஆகியோருக்கு 150-க்கும் மேற்பட்ட பிரபல குடிமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment