திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 8, 2021

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம்

திருச்சி சுப்ரமணியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் பெரியார் மருந்தியல் கல்லூரியில் 06.09.2021 அன்று காலை 9.00 மணியளவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்கள் தலைமையில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.  இதில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தின் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் திருச்சி சுந்தர் நகர், கே.கே. நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள பொதுமக்கள் உட்பட 125 நபர்களுக்கு கோவிஷீல்ட்  தடுப்பூசி போடப்பட்டது. இம்மருத்துவ முகாமில் மருத்துவர் டி. சூர்ய நிலா, செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் கலந்து கொண்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை பயனாளர்களுக்கு செலுத்தினர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் பெரியார் நலவாழ்வு சங்கம் சிறப்பாக செய்திருந்தது.

No comments:

Post a Comment