ஆலந்தூர், செப். 1- சென்னை மத்திய கைலாசிலிருந்து சிறுச்சேரி வரை உள்ள பழைய மாமல்லபுரம் சாலையில் கடந்த 12 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங் களின் அதிகரிப்பால் சாலைகள் மேம்படுத்தப் பட்டன.
அப்போது சென்னை புறநகர் பகுதிகள் பேரூ ராட்சி மற்றும் ஊராட்சி களாக இருந்ததால் பெருங் குடி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், மேட வாக்கம் சாலை, சோழிங் கநல்லூர் கலைஞர் சாலை ஆகிய 4 இடங்களில் சுங் கச்சாவடிகள் அமைக்கப் பட்டன.
மேற்கண்ட பகுதிகள் சமீப காலத்தில் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் மாநகராட்சி எல்லைக் குள் அமைந்துள்ள இத் தகைய சுங்கசாவடிகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகளிடம் கோரிக்கை எழுந்தது.
சுங்கச்சாவடிகளை அகற்ற கோரி தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட் சிகள் சார்பில் ஆர்ப்பாட் டங்கள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் பழைய மாமல்லபுரம் சாலையில் மெட்ரோ பணிகள் நடக்க இருப்பதால் 30.8.202 அன்று முதல் பெருங்குடி, பள்ளிக்கரணை-துரைப்பாக்கம், மேடவாக்கம் சாலை, சோழிங்கநல்லூர் கலை ஞர் சாலை ஆகிய 4 சுங் கச் சாவடிகளில் கட்ட ணம் வசூலிப்பது நிறுத் தப்படும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு அப்பகுதி வாகன ஒட்டி கள் வரவேற்பு தெரிவித்த னர். பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள 4 இடங்களில் சுங்கச்சாவடி மூடப்படுவதையொட்டி பெருங்குடி சுங்கச் சாவடி அருகே தென் சென்னை நாடாளுமுன்ற உறுப்பி னர் தமிழச்சி தங்கபாண் டியன், சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப் பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் தலைமையில் திமுக. நிர்வாகிகள் பட்டாசு களை வெடித்து இனிப்புகள் வழங்கினர்.
No comments:
Post a Comment