புதுடில்லி, செப். 30 இந்த மாதம் 12 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதி மன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
நாடெங்கும் மருத்து வக் கல்லூரிகளில் சேர நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழ் நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட் தேர் வுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நீட் தேர்வு பயத்தால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது இந்த எதிர்ப்பை மேலும் அதி கரிக்கச் செய்தது. இந் நிலையில் இந்த வருடத் துக்கான நீட் தேர்வு இந்த மாதம் செப்டம்பர் 12 ஆம் தேதி நடந்தது.
இந்த நீட் தேர்வு குறித்து ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாகப் பல நீட் தேர்வு பயிற்சி மய்யங் களில் கேள்வித் தாள் தேர்வுக்கு முன்பே வெளி யானதாகப் புகார்கள் எழுந்தன.
இந்த முறை கேட்டுடன் வேறு பல ஆள்மாறாட்டம் போன் றவையும் நடந்து சிலர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக ராஜஸ்தான், உத்தரப் பிரதேச நீட் தேர்வு மய்யங்களில் முறைகேடு நடந்ததாகப் புகார்கள் எழுந்தன.
எனவே, இம்முறை நீட் தேர்வு எழுதிய மாண வர்களில் சிலர் உச்சநீதி மன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய் துள்ளனர்.
அந்த மனுவில், "நாட் டில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மய்யங்களில் கேள்வித் தாள் வெளி யாகி பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளன. குறிப்பாக ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் நீட் தேர்வு மய்யங்களில் ஆள் மாறாட்டம் அதிக அளவில் நடந்துள்ளன. எனவே செப்டம்பர் 12 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என மாண வர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment