திக்கெட்டும் ஒளியூட்டும் திராவிடச் சூரியன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் - காணொலி கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 8, 2021

திக்கெட்டும் ஒளியூட்டும் திராவிடச் சூரியன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் - காணொலி கருத்தரங்கம்

காரைக்குடி, செப்.8 காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக 'திக் கெட்டும் ஒளியூட்டும் திராவிடச் சூரியன்' முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற தலைப்பில் காணொலி வழியாக கருத்தரங்கம் 06.09.2021அன்று நடை பெற்றது.

நிகழ்வுக்கு மாவட்டத் துணைச் செயலாளர் ..பழனிவேல் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அரங்கசாமி மாவட்ட செயலாளர் வைகறை முன் னிலை வகித்தனர். நகர தலைவர் ஜெகதீசன்  வரவேற்புரையாற்றினார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேவகோட்டை தமிழ் இலக் கியப் பேரவை தலைவரும், தேவ கோட்டை ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவருமான கவிஞர் அரவரசன் சிறப்புரையாற்றினார்.அவரது உரையில் "தமிழ்நாடு முதலமைச்சர் இளம் பருவ காலத்தில் இருந்து அவருடைய அரசியல் நடவடிக்கைகள், போராட்டங்கள் மிசா சிறைவாசம், அரசியல் செயல்பாடுகள் என்பன பற்றியெல்லாம் மிக சிறப்பான தொரு கருத்துரையாற்றினார்.

இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் நிறைவேற்றிய பல்வேறு நலத் திட்டங்களையும், மக்கள் பணிகளையும், பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளான கருவறை தீண்டாமை ஒழிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகும் திட்டத்தை நிறைவேற்றிய தையும் தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17 அன்று சமூகநீதி நாள் என வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வையும் எடுத்துச் சொல்லி இன்றைய தலைமுறையினருக்கு மிகப்பெரிய ஒரு முன்னு தாரணமாகவும், இந்திய ஒன்றிய அரசியலுக்கு வழிகாட்டி யாகவும் திகழ்கிறார் நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் முழு உருவமாக முதிர்ச்சி பெற்ற தலைவராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் விளங்கு வதை மிக சிறப்பான வகையில் எடுத்துக் கூறினார். நிகழ்வில் தோழர் வெங்கடேசன் நன்றி உரையாற்றினார்.

நகர செயலாளர்  தி..கலைமணி, பேராசிரியர் கண்மணி,  சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் அனந்தவேல் மற்றும் பலர்  நிகழ்வில் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment