அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆணை, பெரியார் உலகத்துக்கான ஆணை தி.மு.க. ஆட்சியில் நமது போற்றுதலுக்குரிய முதல் அமைச்சரால் கிடைக்கப் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.
"பெரியார் உலகம்" பணிகள் தொடங்கப்பட உள்ளன. அமெரிக்காவில் - வாசிங்டனில் கறுப்பர்கள் எப்படி விடுதலை பெற்றனர் என்பதை விளங்கும் அருங்காட்சியகம் - கண்காட்சி உள்ளது.
"பெரியார் உலகமும்" அதே போன்றதே! தந்தை பெரியாரால் நாம் சுயமரியாதை பெற்றது எப்படி - சமூகநீதி பெற்றது எப்படி என்பவை முக்கியமானதாகும். இவற்றை விளக்கும் வரலாற்றுக் கண்ணாடியே பெரியார் உலகம்!
தமிழர் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இதில் இருக்க வேண்டும். நமது பேரப் பிள்ளைகள் சொல்ல வேண்டும். 'எங்கள் தாத்தா பெரியார் உலகம் உருவாக்கத்திற்கு இவ்வளவுத் தொகை நன்கொடை கொடுத்தார்' என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.
தமிழர்கள் நன்றி தெரிவிக்கும் வாய்ப்பாகும் இது. "நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது - வேறு எவராலும் முடியாதது - நம்மால் மட்டுமே முடியும்" என்பது வெறும் சொற்கள் அல்ல; செயல் முடிக்கும் உறுதியின் வெளிப்பாடு என்பதை செயலில் காட்டுவோம்.
வாழ்க பெரியார், வெல்க திராவிடம்!
- பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடலில் தமிழர் தலைவர் உரையிலிருந்து
குறிப்பு: பகுத்தறிவாளர் கழகத்தின் பங்களிப்பு கணிசமாக இருக்கும் என்று உறுதி கூறப்பட்டது.
No comments:
Post a Comment