சட்டமன்றத்தில் இன்று.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 8, 2021

சட்டமன்றத்தில் இன்று....

தமிழ்நாட்டில் 21 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும்

அமைச்சர் .பொன்முடி அறிவிப்பு

சென்னை,செப்.8- தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (8.9.2021) கேள்வி நேரத்தின் போது கிணத் துக்கடவு சட்டப்பேரவை உறுப்பினர் தாமோதரன், கிணத்துக்கடவு தொகுதி யில் ஒரு கலை, அறிவியல் கல்லூரியை தொடங்க தமிழ்நாடு அரசு முன் வருமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்துப் பேசினார்.

அப்போது அவர், கிணத்துக்கடவு தொகுதி யில் கலை, அறிவியல் கல்லூரி அமைக்கும் எண் ணம் தற்போது அரசுக்கு இல்லை என்று தெரிவித் தார். பெரும்பாலும் எல்லா சட்டமன்ற தொகுதி களில் இருந்தும் இது போன்ற விண்ணப்பங்கள் வந்து கொண்டிருப்பதா கவும் அமைச்சர் குறிப் பிட்டார்.

மேலும் இந்த கல்வி ஆண்டுக்கு மட்டுமே உயர்கல்வித்துறை சார் பில் 10 கலை, அறிவியல் கல்லூரிகளும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகளும், கூட்டுறவுத்துறை சார் பில் ஒரு கல்லூரியும் என மொத்தம் 21 கல்லூரிகள் அமைக்கப்பட உள்ள தாக சட்டப்பேரவையில் அமைச்சர் .பொன்முடி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment