வீட்டில் இருந்து பணி புரிவதை நீட்டித்தது கூகுள் நிறுவனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 2, 2021

வீட்டில் இருந்து பணி புரிவதை நீட்டித்தது கூகுள் நிறுவனம்

கலிபோர்னியா, செப். 2- கரோனா ஒரு தொற்று நோய் என கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக சுகாதார மய்யம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான நாடுகளும் நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தன.

இதனால் சிறு நிறுவனம் முதல் கூகுள், பேஸ்புக் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் உள்பட அய்.டி. நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய கேட்டுக்கொண்டது. இந்த வருடம் மார்ச் மாதம் மீண்டும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைக்கும் சூழல் ஏற்பட்ட நிலையில் 2-ஆவது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியை தொடர்ந்தனர்.

தற்போது 2-ஆவது அலை கட்டுக்குள் வந்துள்ள தாலும், பெரும்பாலான நாடுகள் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கிவிட்டதாலும் பல நிறுவனங் கள் தங்களது ஊழியர்களை அலுவலகம் வந்து வேலைப் பார்க்க கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனால் கூகுள் நிறுவனம் இன்னும் ஊழியர்களை அலுவலகம் வந்து வேலை செய்யுமாறு அழைக்கவில்லை. இந்த நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10ஆம் தேதி வரை ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைக்கப்பட மாட்டார்கள். அழைக்கப்படுவதற்கு முன் சுமார் ஒருமாதம் வரை காலஅவகாசம் கொடுக்கப் படும் என அந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுந்தர் பிச்சை கூறுகையில் ‘‘ஏராளமான உலகளாவிய நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. நாங்கள் எங்களுடைய 10 ஆயிரம் ஊழியர்களை விருப்பத்தின் அடிப்படையில் வரவேற்க இருக்கிறோம் என்பதை கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாங்கள் எதிர்பார்த்ததைவிட இதற்கான ஏற்பாடுகள் சற்று தொலைவில் உள்ளன. இருந்தாலும் அதற்காக நாங்கள் ஒன்றிணைவோம்’’ என்றார்.

மேலும், அலுவலகத்திற்கு அழைக்கப்படுவதற்கு முன் 30 நாள்கள் காலஅவகாசம் கொடுப்போம். அக் டோபர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கூடுதல் ஓய்வு நாள் களை அவர்கள் பெற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment