இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 3, 2021

இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம்

கொழும்பு, செப்.3 இலங்கையில் உணவுப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே பொருளாதார அவசர நிலையை பிறப்பித்துள்ளார்.

அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. கரோனா சூழல், நாட்டின் பிரதான வருவாய்த் துறையான சுற்றுலாவின் முடக்கம் போன்றவை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இது போன்ற காரணங்களால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்துள்ள தால், இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்திருக்கிறது.

இதனால் உணவுப்பொருட்கள் உள்ளிட்டஅத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இருப்பு குறைவாலும், பதுக்கல் அதிகரிப்பாலும் நாட்டில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.

இந்நிலையில் உணவுப்பொருட் களின் பதுக்கலை தடுக்கவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கவும் நாட்டில் பொருளாதார அவசர நிலையை அதிபர் கோத்தபய ராஜ பக்சே பிறப்பித்துள்ளார். இதன் மூலம், அரிசி, சர்க்கரை போன்ற முக்கிய உணவுப்பொருட்களின் விலையை நியாயமான விதத்தில் பராமரிக்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ராணுவ முன்னாள் தளபதி ஒருவரை அத்தியாவசிய சேவைகள் ஆணையராக அரசு நியமித்துள்ளது. வியாபாரிகள், சில்லறை வர்த்தகர்கள் பதுக்கும் உணவுப்பொருட்களை பறிமுதல் செய்யவும், அத்தியாவசிப் பொருட் களின் விலையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அரிசி, நெல், சர்க்கரை போன்ற உணவுப்பொருட்களை கொள் முதல் செய்து, மக்களுக்கு நியாய மான விலையில் வழங்குவதற்கு அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப் பார்கள் என அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய மருந் துகள், தடுப்பூசி இறக்குமதிக்கு அன் னியச் செலாவணியை பயன்படுத்த உதவும் வகையில், எரிபொருளை சிக்கனமாக உபயோகிக்கும்படி வாகன ஓட்டிகளை இலங்கை எரிசக்தித் துறை அமைச்சர் உதய கம்மன்பில கேட்டுக்கொண்டுள் ளார்.

எரிபொருள் பயன்பாடு குறைய வில்லை என்றால், அதன் பயன் பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படலாம் என்றும் அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment