காபூல், செப். 2- ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் 31.8.2021 அன்று இரவு முழுமை யாக வெளியேறியது. 20 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்ததாக அமெரிக்கா முறைப் படி அறிவித்தது.
இதனிடையே அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளி யேறியதை தொடர்ந்து ஆப் கானிஸ்தானுக்கு முழு சுதந் திரம் கிடைத்துவிட்டதாக தலி பான்கள் அறிவித்தனர்.
இதுகுறித்து தலிபான் பயங் கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிபஹுல்லா முஜாஹித் கூறுகையில் ‘‘அமெ ரிக்க வீரர்கள் காபூல் விமான நிலையத்தை விட்டு சென்று விட்டனர். நமது நாடு முழு சுதந்திரம் அடைந்துவிட்டது’’ என கூறினார்.
காபூல் விமானநிலையத்தில் இருந்த தலிபான் வீரர் ஹேமந்த் ஷெர்சாத் என்பவர் இது பற்றி கூறுகையில் ‘காபூலில் இருந்து அமெரிக்காவின் கடைசி 5 விமானங்களும் வெளியேறிவிட்டன. என்னுடைய மகிழ்ச் சியை வெளிப்படுத்த வார்த்தை கள் இல்லை. 20 ஆண்டுகள் தியாகத்துக்கு பலன் கிடைத்து விட்டது' என்றார்.
200 அமெரிக்கர்கள் சிக்கித் தவிப்பு
தற்போது அமெரிக்கர்கள் சிலர் கூட ஆப்கானிஸ்தானில் சிக்கி இருப்பது தெரிய வந்துள் ளது. அவர்களால் உரிய நேரத் தில் விமான நிலையத்திற்கு வர முடியாமல் ஆங்காங்கே மாட் டிக் கொண்டார்கள்.
அதை மீறி வந்தால் பயங் கரவாதிகள் தாக்கக் கூடும் என பயந்து தாங்கள் இருந்த இடத் திலேயே சிலர் பதுங்கிக் கொண் டனர். இதனால் அவர்களாலும் விமான நிலையத்துக்குவர முடியவில்லை.
இவ்வாறு 100 முதல் 200 அமெரிக்கர்கள், ஆப்கானிஸ் தானில் சிக்கி இருக்கலாம் என கருதுவதாக அமெரிக்க வெளி யுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் கூறி உள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, ‘‘ஆப்கானிஸ்தானில் சிக்கி உள்ள அமெரிக்கர்களையும், மற்றவர்களையும் தலிபான்கள் பத்திரமாக அனுப்பி வைப் பார்கள் என்று நம்புகிறோம். அவர்களை மீட்பதற்கு உரிய உதவிகளை அமெரிக்கா செய் யும்’’ என்றார்.
தற்போது ஆப்கானிஸ்தா னில் சிக்கி உள்ள 200 அமெ ரிக்கர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. ஒரு வேளை தலிபான்கள் அவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக் கைகள் மேற் கொள்ள வாய்ப்பு உள்ளது. அவ்வாறு இல்லை என் றாலும், ஆப்கானிஸ்தானில் செயல்படும் அய்.எஸ்., அல் கொய்தா பயங்கரவாதிகள் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களின் உயி ருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது.
பாலைவனம் வழியாக தப்பி செல்லும் மக்கள்
ஆப்கானிஸ்தானில் தலீ பான்கள் ஆட்சியைப் பிடித்த தால் உயிருக்கு பயந்துள்ள ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டு எல்லையைக் கடந்து பாகிஸ்தானில் உள்ள நிம்ரூஸ் பாலைவனம் வழியாக ஈரான் நாட்டுக்கு தப்பி செல் கின்றனர்.இங்கிருந்து அவர் கள் அய்ரோப்பா செல்லலாம் என கூறப்படுகிறது.இந்த ஆண் கள், பெண்கள் மற்றும் குழந் தைகளுக்கு, அவர்களின் ஆரம்ப இலக்கு துருக்கியாக இருக்கலாம் ஆனால் ஆயிரக் கணக்கான மைல் தொலைவுகளுக்கு அப் பால் ஈரான் உள்ளது
பாலைவனங்கள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட ஆப் கானிஸ்தானின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாகாணமான பாலைவனமான நிம்ரூஸில் இருந்தே இந்த பயணங்கள் தொடங்குகிறது.
கண்ணுக்கு எட்டியவரை மனிதத் தலைகளே தென்படு வதால் இதனைப் பேரவலம் என்று அய்ரோப்பிய நாடாளு மன்ற உறுப்பினர்கள் கூறியுள் ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment