திருத்துறைப்பூண்டி, செப்.11 திருத்துறைப்பூண்டி கழக மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம், மேட்டுப் பாளையம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ரெ.புகழேந்தியின் அண்ணன் ரெ.மணிமாறன் மாலதி ஆகியோரின் மகள் ம.சுடர்விழிக்கும் மன்னார்குடி வட்டம், ஆலங்கோட்டை வ.அன்புச்செல்வன் அமுதா ஆகியோரின் மகன் அ.அய்யப்பன் ஆகியோரது வாழ்க்கை இணைஏற்பு ஒப்பந்த விழா 29.08.2021 அன்று காலை 11 மணி அளவில் உள்ளிக்கோட்டை வி.கே.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ரெ.புகழேந்தி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
இணையேற்பு விழாவை தலைமை ஏற்று திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வீ.மோகன் மணமக்களை உறுதிமொழி ஏற்கச் செய்து இணையேற்பு விழாவினை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் பெ.வீரையன், திருத்துறைப்பூண்டி மாவட்டத் தலைவர் கி.முருகையன், மாவட்ட செயலாளர் சு.கிருட்டினமூர்த்தி, மாநில விவசாய தொழிலாளரணி மேனாள் செயலாளர் விளக்குடி கோ.தமிழ்ச்செல்வன், மாவட்ட மகளிரணி தலைவர் சி.கலைவாணி, நகரத் தலைவர் தி.குணசேகரன், ஒன்றியத் தலைவர் சு.சித்தார்த்தன், நகரச் செயலாளர் ப.நாகராஜன், திருவாரூர் மண்டல மாணவர் கழக செயலாளர் அஜெ.உமாநாத், மதுக்கூர் பாலா, படைப்பைக்காடு கருணாகரன், சு.உமாசங்கர், தி.பு.அறிவு முதல்வன், திருப்பாலக்குடி இன்பக்கனி, பகுத்தறிவாளர் கழக
தோழர் களப்பால் ப.சம்பத்குமார், பண்ணை தெரு சாமிநாதன் உள்ளிட்ட தோழர்கள் நண்பர்கள் பங்கேற்றனர். இறுதியாக மேல திருப்பாலக்குடி திமுக இளைஞரணி தம்பி சுரேஷ் அவர்கள் நன்றி கூறினார்.
அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தங்க.சிவமூர்த்தி அவர்களுக்கு நல்லாசிரியர் விருது
அரியலூர், செப்.11- அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவரும், அரியலூர் மாவட்டம் மணலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியருமான தங்க சிவமூர்த்தி அவர்களுக்கு மாநில அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.ஆசிரியர் நாளை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் மாநில நல்லாசிரியர் விருதுகள் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அவர்கள் பங்கேற்று விருதுகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் ரமணா ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செந்துறை கல்வி மாவட்டத்திலிருந்து அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் தங்க சிவமூர்த்தி அவர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு விருதினைப் பெற்றார்.
No comments:
Post a Comment