சென்னை,செப்.2- சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் மாநிலங்களவை உறுப் பினராக திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா போட் டியின்றி தேர்வு செய்யப் படுவது உறுதியாகியுள் ளது. இதனால் மாநிலங்கள வையில் திமுகவின் பலம் 8 ஆக உயர்கிறது.
கடந்த 2019 ஜூலையில் அதிமுக சார்பில் மாநிலங் களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அ.முகமது ஜான், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மார்ச்
23-ஆம் தேதி காலமானார். இதனால் அவர் வகித்த மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானது.
இந்த ஓரிடத்தை நிரப்புவதற்காக வரும் செப்.13-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஆகஸ்ட் 24 தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா, சுயேச்சையாக கே.பத்மராஜன், அக்னிராமச்சந்திரன், கோ.மதிவாணன் என்று மொத்தம் 4 பேர்வேட்புமனு தாக்கல் செய்திருந் தனர்.
வேட்புமனுக்கள் நேற்று (1.9.2021) காலை 11 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆய்வுக்குப் பிறகு திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லாவின் வேட்பு மனு மட்டுமே செல்லத்தக்கது என்றுஅறிவிக்கப்பட்டது. மற்ற மூவரின்வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரியும், தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளருமான கி.சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நாளை அறிவிப்பு
வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளை (செப்.3) கடைசி நாளாகும். அன்றைய தினம் திமுகவேட்பாளர் எம்.எம்.அப்துல்லாபோட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார். 2025 ஜூலை 24-ஆம் தேதி வரை அப்துல்லா மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்க முடியும். நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுகவுக்கு தற்போது ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ, டி.கே.எஸ்.இளங்கோவன், அந்தியூர் செல்வராஜ், எம்.சண்முகம், திருச்சி சிவா,பி.வில்சன் ஆகிய 7 எம்பி.க்கள்உள்ளனர். அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதி யாகியுள்ளதால் மாநிலங் களவையில் திமுகவின் பலம் 8 ஆக உயர்கிறது.
தமிழ்நாட்டில் புதிதாக 1,509 பேருக்கு கரோனா தொற்று - 20 பேர் உயிரிழப்பு
சென்னை,செப்.2- தமிழ்நாட்டில் புதிதாக 1,509பேருக்கு கரோனா தொற்றுஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று (1.9.2021) ஆண்கள்858, பெண்கள் 651 என மொத்தம்1,509 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்ச மாக கோவையில் 186, சென் னையில் 177, ஈரோட்டில் 137 பேர் தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 16,620 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று 20 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 34,941 ஆக உயர்ந்துள்ளது. சென் னையில் மட்டும் 8,402 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment