பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர்
இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி கள், கல்லூரிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன.
பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர் களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகிறது. கல்லூரி களை பொறுத்தவரையில் முதலாம் ஆண்டு மாணவர் களை தவிர பிற மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும், அதில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் அனைத்து நாட்களிலும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
பள்ளிகள், கல்லூரிகள் வகுப்பறையில் 50 சதவீத மாணவர்களுடன், வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் நேற்று முழுவதும் கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன. சமூக இடைவெளி யோடு வகுப்பறையில் மாணவர்கள் அமருவதற்கு ஏற்றவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இன்று (1.9.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு வந்த மாண வர்களின் உடல் வெப்பநிலை பரிசோதித்த பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.
ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு தடுப்பூசி போட்ட ஆசிரி யர்கள் மட்டும் பள்ளிக்கு வர கல்வித்துறை உத்தர விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகமாக வந்தனர். அவர்களை ஆசிரி யர்கள் வரவேற்றனர்.
தமிழ்நாடு முழுவதும் இன்று 13 ஆயிரத்து 605 பள்ளிகள் திறக்கப்பட்டன.
பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, ஜெயங்கொண்டம்
No comments:
Post a Comment