அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் கரோனா பரிசோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 8, 2021

அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் கரோனா பரிசோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, செப்.8 அனைத்துப் பள்ளிகளி லும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் கரோனா பரிசோ தனை செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை ரெட்டிக்குப்பம் சாலை அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகில் ரூ.13 லட்சம் மதிப்பில் சாலையோரப் பூங்கா அமைக் கும் பணியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (7.9.2021) தொடங்கிவைத்தார். அப் போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 44 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 12 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி யுள்ளனர். அந்த வகையில் 5.9.2021 வரை தமிழ்நாட்டில் மொத்தமாக 3 கோடியே 59 லட்சத்து 31 ஆயிரத்து 627 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் 22 லட் சத்து 17 ஆயிரத்து 54 பேருக்கு தடுப் பூசிகள் போடப்பட்டுள்ளது. தற்போது தனியார் மருத்துவமனைகளில் தடுப் பூசிகள் இல்லை.

சுழற்சி முறையில்

பரிசோதனை

வருகிற 12ஆம் தேதி ஒரே நாளில் 10 ஆயிரம் முகாம்களில் 20 லட்சம் தடுப் பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக் கக்கப்பட்டுள்ளதால், கூடுதல் தடுப் பூசிகளை கேட்டு ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளேன். தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகம் உள்ள 9 மாவட் டங்களை இலக்கு வைத்துத்தான் இந்த தடுப்பூசி முகாம் நடத்தப்பட இருக் கிறது. எந்தெந்த பள்ளிகளில் மாணவர் கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டதோ, அந்த பள்ளிக ளுக்கு சீல் வைத்து, சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வரு கிறது. பள்ளிகளில் கரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. ஆனாலும், அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் தொடர்ந்து கரோனா பரி சோதனை மேற்கொள்ளப்படும்

No comments:

Post a Comment