இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பிற மாநிலங்களிலும் கருத்தரங்குகள் நடத்தப்படும் என அய்க்கிய ஜனதா தள நாடாளுமன்ற குழு தலைவர் உபேந்திர குஷ்வாஹா அறிவித்துள்ளார்.
· உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக மூன்று பெண்கள் உட்பட ஒன்பது புதிய நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவி ஏற்றுள்ளனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், அனைத்து ஜாதியினருக்கும் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்காததால், கருநாடகாவில் காங்கிரஸ் அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியது என காங்கிரஸ் தலைவர் சித்தராமைய்யா கூறியுள்ளார்.
· தமிழ்நாட்டில் வருமான அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை தொடர்ந்து எதிர்த்து வரும் நீண்ட வரலாற்றைக் கொண்டது. பொருளாதார அளவுகோல், ஜாதி அடிப்படையிலான ஒதுக்கீட்டை பலவீனப்படுத்தும் என அரசியல் கட்சி தலைவர்கள் கருதுகின்றனர் என கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார்.
· பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு ஏற்படுத்தும் கருத்து குறித்து காமெடி நடிகர் எஸ்.வி.சேகரின் விளக்கம் திருப்தி அளிக்க வில்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தி டெலிகிராப்:
மோடியின் கீழ் இந்தியா இனரீதியான ஜனநாயகத்திற்கு மாறி வருவதாகவும், சிறுபான்மையினர் இரண்டாம் வகுப்பு குடிமக்களாக கருதப்படுகிறார்கள் என்றும் சர்வாதிகாரம் நாட்டில் ‘திரும்ப முடியாத நிலையை’ அடையும் அபாயம் உள்ளது என்றும் பிரெஞ்சு அறிஞர் கிறிஸ்டப் ஜாப்ரலெட் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment