பொதுத்துறை நிறுவனங்களை விற்பது வேதனையளிக்கிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 11, 2021

பொதுத்துறை நிறுவனங்களை விற்பது வேதனையளிக்கிறது!

காரைக்குடியில் மேனாள் ஒன்றிய அமைச்சர் .சிதம்பரம் பேட்டி

காரைக்குடி ,செப்.11- காரைக் குடியில் முன்னாள் நிதி அமைச் சர் .சிதம்பரம் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

 தமிழ்நாடு அரசு தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் நமது கோரிக்கையை ஏற்று திருப்பத்தூர் தொகுதிசெட்டி நாடு பகுதியில் வேளாண்மைக் கல்லூரி அமைத்ததற்கும் , கல்வி நகரமாம் காரைக்குடியில் சட்டக் கல்லூரி அமைக்க  உத் தரவிட்டதற்கும் முதலமைச் சருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர்கள்  எம்.ஆர்.கே.பன் னீர்செல்வம், எஸ்.ரகுபதி , கேஆர்.பெரியகருப்பன் ஆகி யோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

கன்டனூரில் 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த கதர் கிராம தொழிற்சாலையை 47 லட்ச ரூபாய் செலவில் நிதி ஒதுக்கி சீர் செய்ததற்கும் நன் றியை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற 2022- 2023 ஆண்டு வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்து , நிதி நெருக்கடி காலத்திலும் ஒவ் வொரு தேர்தல் அறிக்கையை நிறைவேற்றி வருவது பாராட் டத்தக்கது. மக்கள் மகிழ்ச்சி யாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறார்கள் இதே கட மையை தொடர்ந்து மக்கள் உணர்வுடன் தொடர வேண்டும் என கேட்டு கொள்கிறேன். என்னுடைய மூன்று ஆசைகளில் வேளாண்மை கல்லூரி, சட்டக் கல்லூரி வந்துவிட்டது. மகத் தான தமிழ் நூலகம் நிறைவேற்ற வேண்டும்.

காரைக்குடி அழகப்பா பல் கலைக் கழகத்திற்கு துணை வேந்தர் நியமிக்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது.புதிய ஆளுநர் வந்துள்ளார்.  3 பேராசிரியர்களை  தேர்வு செய்து அனுப்பும் போது ஆளுநர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் . செப்டம்பர் அல்லது அக்டோபரில் செய்வார்கள் என நம்புவோம். இது குறித்து அமைச்சர் பொன்முடியுடன் தொடர்பு கொண்டு மேலும் தமிழ்நாடு நூலகம் அமைய வலியுறுத்துவேன்.

ஒன்றிய அரசு பொதுத் துறையை கொஞ்சம் கொஞ்சமாக இல்லை மொத்தமாக விற்று விடுவார்கள். இதனை ஆர்எஸ்எஸ் தொழிற்சங்கம் கூட கண்டித்துள்ளதை பாராட் டுகிறேன். பொதுத் துறை தீபா வளி ஆபர் விற்பனை போல் முடிந்து போன கடையில் பொருட்களை விற்பது போல் உள்ளது. பொது துறை மூடு விழா செய்வது வேடிக்கையல்ல - வேதனையளிக்கிறது. ஒன்றிய அரசை எதிர்த்து அனைத்துக் கட்சிகள் போராட்டம் நடத் துவது  மக்கள் மத்தியில் சிந்திக்க வேண்டும் என்பதாலும், பிரச் சினையின் முக்கியத்துவத்தையும்  அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசின் நடவடிக் கைகள் மக்கள் மத்தியில் வரவேற்கப்படுகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணியானது உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என கூறினார். பேட்டியின் போது  காரைக்குடி எம் எல் . எஸ்.மாங்குடி, மேனாள் ... கே.ஆர்.ராமசாமி, நகர் தலைவர் பாண்டி மெய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment