ஜெய்ப்பூர்,செப்.11- அவசர காலங் களில் பயன்படுத்தும் நோக்கத்தில் ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலை யில் விமானப்படை விமானங்கள், ஹெலி காப்டர்கள் நேற்றுமுன் தினம் (9.9.2021) வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டன. போர், இயற்கை பேரிடர் போன்ற அவசர காலங்களில் விமானப்படை விமா னங்கள், போர் விமானங்களை இறக் கவும், பறக்கவும் தேசிய நெடுஞ்சாலை களை பயன்படுத்த திட்டம் வகுக்கப் பட்டுள்ளது. எதிரிகளின் தாக்குதல் அல்லது இயற்கைப் பேரிடர்களால் விமானப்படை தளங்கள் சேத மடையும் பட்சத்தில், தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத் தவே இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017இல், உத்தரப் பிரதேசத்தில் இம்மாநில அரசுக்கு சொந்தமான பசுமை நெடுஞ்சாலையில் விமானத்தை இறக்கி முதல் கட்ட சோதனை வெற்றி கரமாக நடத்தப்பட்டது. இந்நிலை யில், ராஜஸ்தான் மாநிலம், பார் மரில் உள்ள சட்டா - காந்தவ் பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் விமானப் படை விமானங்கள், ஹெலி காப் டர்களை தரையிறங்கும் வகையில் 3 கிமீ தூரத்துக்கு விமான ஓடுதள தரத்தில் சாலை அமைக்கப்பட்டுள் ளது. இந்த சாலையில் விமானப் படையின் ஹர்குலஸ் விமானம் நேற்று முன்தினம் (9.9.2021) முதன் முறையாக தரையிறங்கியது.
இதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ராணுவ தலைமை தளபதி பிபின், விமா னப் படை தளபதி பதவுரியா உள்ளிட் டோர் பயணம் செய்தனர். இதைத் தொடர்ந்து, விமானப் படையின் சுகோய் போர் விமானம், ராணுவ ஹெலிகாப்டர்கள் தரையிறங்கின. இந்த வசதியை துவக்கி வைத்து பேசிய ராஜ்நாத் சிங், ‘‘பார்மரை போல் தேசிய நெடுஞ்சாலைகளில் விமானப்படை விமானங்கள் அவசர மாக தரையிறங்கும் வசதி, புதுச்சேரி கடற்கரை சாலை உட்பட நாடு முழுவதும் 20 இடங் களில் விரைவில் ஏற்படுத்தப்படும்,’’ என்றார். அவசர காலங்களில் போர் விமானத்தை இறக்குவதில் ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் சோதனையோட்டம்
ஜெய்ப்பூர்,செப்.11- அவசர காலங் களில் பயன்படுத்தும் நோக்கத்தில் ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலை யில் விமானப்படை விமானங்கள், ஹெலி காப்டர்கள் நேற்றுமுன் தினம் (9.9.2021) வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டன. போர், இயற்கை பேரிடர் போன்ற அவசர காலங்களில் விமானப்படை விமா னங்கள், போர் விமானங்களை இறக் கவும், பறக்கவும் தேசிய நெடுஞ்சாலை களை பயன்படுத்த திட்டம் வகுக்கப் பட்டுள்ளது. எதிரிகளின் தாக்குதல் அல்லது இயற்கைப் பேரிடர்களால் விமானப்படை தளங்கள் சேத மடையும் பட்சத்தில், தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத் தவே இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017இல், உத்தரப் பிரதேசத்தில் இம்மாநில அரசுக்கு சொந்தமான பசுமை நெடுஞ்சாலையில் விமானத்தை இறக்கி முதல் கட்ட சோதனை வெற்றி கரமாக நடத்தப்பட்டது. இந்நிலை யில், ராஜஸ்தான் மாநிலம், பார் மரில் உள்ள சட்டா - காந்தவ் பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் விமானப் படை விமானங்கள், ஹெலி காப் டர்களை தரையிறங்கும் வகையில் 3 கிமீ தூரத்துக்கு விமான ஓடுதள தரத்தில் சாலை அமைக்கப்பட்டுள் ளது. இந்த சாலையில் விமானப் படையின் ஹர்குலஸ் விமானம் நேற்று முன்தினம் (9.9.2021) முதன் முறையாக தரையிறங்கியது.
இதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ராணுவ தலைமை தளபதி பிபின், விமா னப் படை தளபதி பதவுரியா உள்ளிட் டோர் பயணம் செய்தனர். இதைத் தொடர்ந்து, விமானப் படையின் சுகோய் போர் விமானம், ராணுவ ஹெலிகாப்டர்கள் தரையிறங்கின. இந்த வசதியை துவக்கி வைத்து பேசிய ராஜ்நாத் சிங், ‘‘பார்மரை போல் தேசிய நெடுஞ்சாலைகளில் விமானப்படை விமானங்கள் அவசர மாக தரையிறங்கும் வசதி, புதுச்சேரி கடற்கரை சாலை உட்பட நாடு முழுவதும் 20 இடங் களில் விரைவில் ஏற்படுத்தப்படும்,’’ என்றார்.
No comments:
Post a Comment