விவசாயிகள் - ஒன்றிய அரசு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 10, 2021

விவசாயிகள் - ஒன்றிய அரசு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி

புதுடில்லி,செப்.10- புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அரியானா வில் போராட்டத்தில் ஈடு பட்டுள்ள விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் ஒன்றிய அரசு 8.9.2021 அன்று நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடி வடைந்துள்ளது.

ஒன்றிய அரசுகொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வரு கின்றனர்.

கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக டில்லி, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங் களில் விவசாயிகள் தீவிரமாக இந்த போராட் டத்தை முன் னெடுத்து வரு கின்றனர்.

விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுக்க போ ராட்டங்கள் நடந்து வரு கின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி டில்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங் கினர்.

நாட்டின் பல்வேறு பகுதி களைச் சேர்ந்த சங்கங்கள் இந்தபோராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் ஒன்றிய அரசுபல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.

இதையடுத்து, டில்லியை ஒட்டியுள்ள மாநிலங்களிலும் போராட்டம் பரவி வருகிறது. முக்கியமாக அரியானா எல் லைப் பகுதியில் விவசாயிகள் சாலை தடுப்புகளை அமைத்து அங்கேயே தங்கி உள்ளனர்.

இந்த விவசாய போராட்டத் தில் டில்லி எல்லைப் பகுதியை தாண்டி தற்போது புதிய அடையாளமாக அரியானா மாநிலத்தின் கர்னால் பகுதி மாறியுள்ளது.

இங்கு கடந்த 2 வாரமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆக. 28ஆம் தேதி இங்கு நடந்த விவசாயிகள் போராட்டம் நாடு முழுக்க கவனத்தை ஈர்த் தது.

விவசாய சட்டத்துக்கு எதி ராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வைத்து கர்னால் பகுதியில் உள்ள மினி தலை மைச் செயலகத்தை முற்று கையிடும் போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர்.

பாரத் கிஸான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகைத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த விவ சாயிகள், விவசாய சங்க தலை வர்கள், யோகேந்திர யாதவ் போன்ற செயற்பாட்டாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது ஒன்றிய அரசுக்கும், அரியானா மாநில பாஜக அரசுக்கும் எதிராக விவசாயிகள் முழக்கம் எழுப்பினர்கள்.

மினி தலைமைச் செயலகத் தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட் டத்தை கலைத்தனர். போராட் டத்தில் ஈடுப்பட்ட விவசாயி களை கைது செய்தனர். இது மிகப்பெரிய அளவில் பர பரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, விவ சாயிகள் சங்கத் தலைவர்கள் 8.9.2021 அன்று கர்னாலில் உள்ள மினி தலை மைச் செயலகத்தை மீண்டும் முற்றுகையிடச் சென்றனர்.

இதையடுத்து அங்கு அலை பேசி சேவை, இணைய

சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. 

இதனிடையே, போராட் டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் ஒன்றிய அரசு  8.9.2021 அன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில்முடிந்ததாக ராகேஷ் திகைத் தெரிவித்

தார்.

தடியடி சம்பவத்துக்கு காரணமான அதிகாரி ஆயுஷ் சின்கா மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்கி வருவ தாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை மினி தலைமைச் செய லகத்தில் போராட்டத்தை தொடர்வோம் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment