சென்னை, செப்.2 மின்சார ரெயிலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகா ரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.
இது குறித்து ரயில்வே அதிகாரி களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-
தற்போது வரை மின்சார ரயிலில் பயணிக்க பழைய வரைமுறைகளே பின்பற்றப்படுகிறது. அந்த வரைமுறை களில் பெண் பயணிகள் எப்போது வேண்டுமானாலும், பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் படி மாணவிகள் எப்போது வேண்டுமா னாலும், ரயிலில் பயணிக்கலாம்.
ஆனால், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பீக் அவர்ஸ் நேரங்களில் மின்சார ரயிலில் பயணிக்க, தங்களது பள்ளி, கல்லூரி அடையாள அட்டையை காண்பித்து பயணச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் மாத பயண அட்டை தேவை என்றால், சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் இருந்து முறை யான அனுமதிசீட்டை பெற்றுக் கொண்டு, அதை கவுண்ட்டர்களில் காண்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment