முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு
திருவனந்தபுரம், செப். 8- கேரளாவில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப் படுவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரளாவில் தொடர்ந்து 30 ஆயிரத்தைக் கடந்து வந்த தினசரி கரோனா பாதிப்பு, கடந்த சில நாட் களாகச் சற்று குறைந்துள் ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை 26,701 பேருக்கு கரோனா உறுதியானது.
அதனை த்தொடர்ந்து திங்கள் கிழமை 19,688 பேருக்கு கரோனா உறுதி யானது. கடந்த 24 மணி நேரத்தில் 25,772 பேருக்கு கரோனா உறுதியாகியுள் ளது.
இந்த நிலையில், கேரளாவில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊர டங்கு ஆகிய இரு கட்டுப்பாடுகளும் தளர்த் தப்படுவதாக முதலமைச் சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இளங் கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர் களுக்கு அக்டோபர் 4 முதல் வகுப்புகள் தொடங் கும் எனவும் பினராயி விஜயன் அறிவித்துள் ளார். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் முக்கியம் என்பதால், ஆசிரியர்கள் இந்த வாரத்திற்குள் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment