விருத்தாசலம், செப்.8 தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு திருமுதுகுன்றம் பெரியார் நகரில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் தலைமையில் நன்றி முழக்கம் எழுப்பி, பட்டாசு வெடித்து பொதுமக்ளுக்கு இனிப்பு வழங்கப் பட்டது.
இந்நிகழ்வில் பாவலர் அறிவுமதி, எழுத்தாளர் இமையம், கழக மாநில இளைஞரணிச் செயலாளர் இளந்தி ரையன், மாவட்டச் செயலாளர் வெற்றிச் செல்வன், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ். கணேஷ்குமார், திமுக நகர துணைச் செயலாளர் எஸ் ராமு, திராவிடப் பத்திரிகையாளர் சங்க மாநிலத் தலைவர் மாய.முனுசாமி, மாவட்ட இளைஞரணித் தலைவர் சிலம்பரசன், கம்மாபுரம் ஒன்றியத் தலைவர் பாவேந்தர் விரும்பி, நகரத் தலைவர் சுப்பிரமணியன், நகரச் செயலாளர் சேகர், இளைஞரணி பொறுப்பாளர்கள் பிரவீன், பிரவின் குமார், சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment