நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் வெளியிட எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன்,சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், வழக்குரைஞர் ராஜீவ்காந்தி பெற்றுக் கொண்டனர்
சென்னை,செப்.9- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய 'ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை' நூல் வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நேற்று (8.9.2021) மாலை நடைபெற்றது. திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வரவேற்று இணைப்புரை வழங்கினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்து உரையாற் றினார்.
'ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூலை மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் வெளியிட்டும், சிதம்பரம் மக்களவை உறுப்பினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், திமுக செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் வழக்குரைஞர் ராஜீவ்காந்தி, எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர்
இ.பரந்தாமன் நூலைப் பெற்றுக்கொண்டும் உணர்ச்சிமிகு உரையாற்றினர்.
கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
'ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை' நன்கொடை ரூ.160, ஆர்.எஸ்.எஸ். அறிய வேண்டிய உண்மைகள் நன்கொடை ரூ. 100. இரண்டு புத்தகங்களும் வெளியீட்டு விழாவில் ரூ.200க்கு வழங்கப்பட்டன.
அமைப்புச்செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், செயலாளர் தி.செ.கணேசன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் இரா.தமிழ்செல்வன், வடசென்னை பகுத்தறிவாளர் கழகம் ஆ.வெங்கடேசன், பேராசிரியர் தேவதாஸ், பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் கி.சத்திய நாராயணன், துணை செயலாளர் தென்.மாறன், பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், பெரியார்மாணாக்கன், ஒசூர் வனவேந்தன், சிந்தாதிரிப்பேட்டை மதிவாணன், குன்றத்தூர் திருமலை, ஈக்காட்டுத்தாங்கல் சேகர் உள்பட ஏராளமானவர்கள் நூலினைப் பெற்றுக் கொண்டனர்.
கூட்ட முடிவில் திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை நன்றி கூறினார்.
கரோனா கால கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு, தனி மனித இடைவெளியுடன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment