சுப.வீரபாண்டியன்
எதிர்பாராது வரும் இன்பமும் அதிர்ச்சிதான்!அப்படிப்பட்ட இன்ப அதிர்ச்சி களைத் தொடர்ந்து வழங்கி வருகிறது, தளபதி தலைமையி லான இன்றைய தமிழ்நாடு அரசு! அவற்றுள் ஒன்றே, செப். 6ஆம் தேதி, தமிழ்நாடு சட்டமன்றத்தில், முதலமைச்சர் செய் துள்ள அறிவிப்பு! தந்தை பெரியார் பிறந்த நாளான செப்.17 இனிமேல் தமிழ் நாட்டில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப் படும் என்னும் அந்த அறிவிப்பு!
அதனை வெறும் அறிவிப்பாக இல்லாமல், இந்த ஆட்சியின் கொள்கைப் பிரகடனமாகவே அவர் அறிவித்து உள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது. தன் உரையை அவர் நிறைவு செய்யும் போது, தந்தை பெரியார் மறைந்த போது, தந்தை பெரியார் தனது சுற்றுப் பய ணத்தை முடித்துக் கொண்டார், நாம் தொடர்வோம் என்றார் அன்றைய முத லமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள். நாமும் தொடர்வோம், தொடர்வோம், தொடர்வோம்! என்று அழுத்தம் திருத்த மாக, ஒரு போர் நடைப் பாட்டாக முதல மைச்சர் முழங்கியுள்ளார்.
பெரியார் எங்கள் அறிவுக்குத் தோள், பெரும் போர்க்களத்தில் அவர் எங்கள் வயிரத்தின் வாள் என்று சொல்லாமல் சொல்லியுள் ளார் நம் தளபதி! அந்த நாளை விடுமுறை நாளாக அறிவித்திருக் கலாமே என்று சிலர் கூறுகின்றனர். நல்ல வாய்ப்பாக முதலமைச்சர் அப்படி எந்த அறிவிப்பை யும் தரவில்லை. விடுமுறை நாள் என்று ஆகிவிட்டால், யாரோ ஒரு தலைவர் இன்று பிறந்தாராம், அதனால் விடுமுறையாம் என்று சொல்லி, அந்த நாளை, கேளிக் கைக்கும், ஓய்வுக்கும் உரிய நாளாக ஆக்கிவிடுவர். மாறாக, அந்த நாளை வேலை நாளாக்கி, அன்று அனை வரும் சமூக நீதி உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று நம் முதலமைச்சர் கூறியுள்ளார்.
முதலமைச்சர் முன்மொழிந்துள்ள உறுதிமொழியை நிதானமாக ஒவ்வொரு வரும் படித்துப் பார்த்தால், அது எப்படி உணர்வோடும், உயிர்ப் போடும் இருக் கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும், நம் வாழ்வியல் வழிமுறையாகட்டும் என்கிறது முதல் வரி! இவை இரண்டும் அன்பு நெறியும், பண்பு நெறியும் மட்டு மில்லை. நுணுகிப் பார்த்தால், இவையே திராவிட நெறியும், தமிழ் நெறியும் என்பதை நாம் உணர முடியும். பிறப் பால் அனைவரும் சமம் என்பது தானே திராவிடக் கருத்தியல். பாரடங்கலும் பசிப்பிணி அறுக என்பதும், எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்பதும் தானே உலகளாவிய மனித நேயத் தமிழ்ப் பார்வை! இரண் டையும் இந்த உறுதிமொழி எப்படி இணைக்கிறது பாருங்கள்!
இரண்டாவது வரி, சுயமரி யாதையை யும், பகுத்தறிவையும் கூர்மைப்படுத்து கிறது. மூன்றா வது வரியோ, சமத்துவம், சகோ தரத்துவம், சமதர்மம் ஆகியன வற்றுக்காக, நான் என்னையே அர்ப் பணித்துக் கொள்வேன் என்று உறுதி கூறுகின்றது.
இவற்றை விட ஆழமாக வேறு என்ன சொல்லி விட முடியும்? ஜாதி, மதங்களைக் கடந்து, கட்சி வேறுபாடு களைக் கடந்து அனைத்து அரசு ஊழி யர்களும் இந்த உறுதிமொழியை எடுத் துக் கொள்ளப் போகின்றனர் என்பதை எண்ணும் போது இறும்பூ தெய்கிறது நம் நெஞ்சம்!
உறுதிமொழியின் ஒவ்வொரு சொல் லும் எழுதப்படவில்லை, செதுக்கப்பட்டு உள்ளது!
- நன்றி: ‘முரசொலி', 8.9.2021
No comments:
Post a Comment