மாரியப்பன் தங்கவேலுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 1, 2021

மாரியப்பன் தங்கவேலுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, செப்.1 பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதல் அமைச்சர் மு. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில்,  பாரா ஒலிம்பிக்கில் இந்தியா தொடர் வெற்றியை பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.  தமிழ்நாடு வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துகள். பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் தொடர்ந்து 2ஆவது முறையாக மாரியப்பன் பதக்கம் வென்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு வழங்கப்படும் என முதல் அமைச்சர் மு. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக்கில் தங்கவேலு வெல்லும் 2ஆவது பதக்கம் இதுவாகும். வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பிரதமர் மோடி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து களை தெரிவித்தனர்.

 தொடர்ந்து  பாராஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில், பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி அரசு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment