சென்னை, செப்.8- அடுத்த மாதத்தில் இருந்து மாற்று வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதத் தில், அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை களும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று அறி வுறுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவுரையை செயல் படுத்திடும் விதமாக இந்த அலுவ லகம், அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளையும் வாக் காளர்களுக்கு இலவச மாக வழங்க முடிவு செய் துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 342 அரசு இ-சேவை மய்யங்களிலும் மாற்று புகைப்பட வாக் காளர் அடையாள அட் டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப் படும். இத்திட்டம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அதில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment