வாசிங்டன், செப். 11- அமெ ரிக்கா, ரஷ்யா உள்பட 13 நாடுகள் இணைந்து விண் வெளியில் பன்னாட்டு ஆய்வு மய்யத்தை அமைத் துள்ளன. அந்த மய்யத்தில் 6 வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 3 பேர் 5 அல்லது 6 மாதங்கள் அங்கு தங்கி விட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். அதன் பின்னர் புதிதாக 3 விண் வெளி வீரர்கள் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யத் துக்கு அனுப்பி வைக்கப் படுவார்கள்.
தற்போதைக்கு பன் னாட்டு விண்வெளி நிலை யத்தில் ஏழு வீரர்கள் உள்ளனர். அதில் இரண்டு பேர் ரஷ்யாவின் காஸ்மோனாட்டுகள். மூன்று பேர் அமெரிக் கர்கள், பிரான்ஸ் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த தலா ஒருவர் உள்ளனர்.
பன்னாட்டு விண் வெளி நிலையத்தில் ரஷ் யாவின் பிரிவில் திடீரென பிளாஸ்டிக் புகை வாசனை வந்தது. இதனால் அலா ரம் ஒலித்தது. பிளாஸ்டிக் புகை வாசனை அங்கிருந் தவர்களை சிறிது நேரம் திகைக்க வைத்தது. பில்டர் கருவிகள் மூலம் புகையை கட்டுப்படுத்திய விண்வெளி வீரர்கள் பின்னர் உறங்கச் சென் றனர். அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்பக் கோளா றுகளால் இந்த புதிய பிரச்சினை ஏற்பட்டது.
பின்னர் திட்டமிட்ட படி ரஷ்ய விண்வெளி வீரர்கள் விண்ணில் நடை பயணம் மேற்கொண்ட னர்.
கடந்த ஜூலை மாதம் ரஷ்ய விண்கலம் இணைந்த போது பன்னாட்டு விண் வெளி ஆய்வு நிலையம் 45 நிமிடங்களுக்குக் கட்டுப் பாட்டை இழந்ததாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தெரிவித்துள்ளது. 9.9.2021 அன்று ரஷ்யா வின் ஆய்வு விண்கலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடன் இணைக் கப்பட்டது.
அது ஒரு குறுகிய காலத்திற்கு கட்டுப் பாட்டை இழந்தது. அடிக் கடி ஏற்படும் பிரச்சினை களால் 2025 ஆம் ஆண் டில் பன்னாட்டு விண் வெளி நிலையத்தை விட்டு விலகி தனி விண்வெளி நிலையத்தை அமைக்க வும் ரஷியா திட்டமிட்டு உள்ளது.
No comments:
Post a Comment