‘தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்’ என்பது ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ எனப் பெயர் மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 2, 2021

‘தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்’ என்பது ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ எனப் பெயர் மாற்றம்

முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, செப்.2- சட்டமன்றத் தில் நேற்று (1.9.2021) தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் உரையாற்றுகையில் குறிப் பிட்டதாவது:

இன்று (1.9.2021) நடை பெற் றுக் கொண்டிருக்கக்கூடிய மானி யக் கோரிக்கைகளில் குடிசை மாற்று வாரியமும் இணைந் திருக்கிற காரணத்தால், அது சம்பந்தமாக ஓர்  அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன்.

கோட்டையிலே இருந்தா லும் குடிசை வாழ் மக்களின் வாழ்க்கைக்காக,   அவர்களு டைய முன்னேற்றத்திற்காகச் சிந்தித்தவர் நம்முடைய தலை வர்  கலைஞர் அவர்கள். 


 
முதன்முறையாக ஆட்சிக்கு வந்த போது, அந்த மக்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்காக குடிசை மாற்று வாரியம் என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி னார்.  அதன்மூலமாக, பல்லாயிரக்கணக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்தார்.  அன்றைக்கு  ஒன்றிய அமைச்சராக இருந்தபாபுஜிஎன்று எல் லோராலும் அன்போடு அழைக்கப்படக் கூடிய  பாபு ஜெகஜீவன்ராம் அவர்களே, அந்தத் திட்டத் தைப் பற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டி, புகழ்ந்து பேசியிருக் கிறார். 

மேலும், இது தமிழ்நாட் டில் மட்டுமல்லாமல், இந்தி யாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலங்களிலும் இந்தத் திட் டம் கொண்டுவரப்பட வேண் டுமென்ற அவரது எண்ணத் தையும் அன்றைக்கு வெளிப் படுத்திக் காட்டியிருக்கிறார்.  அந்தளவிற்கு இந்தக் குடிசை மாற்று வாரியம் மிகச் சிறப்பாக தன்னுடைய கடமையைச் செய் திருக்கிறது;  செய்து கொண்டு வருகிறது. 

ஏழையெளிய மக்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த வாரியம், இனிமேல்தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’  (TAMILNADU URBAN HABITAT DEVELOPMENT BOARD)  என்ற பெயரிலே அழைக்கப்படும் என்பதை இந்த மன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஆகவே, குடிசைகளை மாற் றுவது மட்டுமல்ல; குடிசை களில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும் உயர்த் திட வேண்டும்; அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் உயர்த் திட வேண்டும் என்ற எண்ணத் தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என்பதை நம்முடைய  பேரவைத் தலை வர் அவர்கள் மூல மாக இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment