திண்டிவனம்,செப்.11- திண்டிவனம் நீதிமன்ற வளாகத்தில் விநாயகர் கோவிலை அகற்றுவது குறித்து, மாவட்ட நீதிபதி நேரில் விசாரணை நடத்தினார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 2017இல், விநாயகர் கோவில் கட்டப்பட்டது. அனுமதி இன்றி கோவில் கட்டியதற்கு வழக்குரைஞர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், தாதாபுரத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் பன்னீர்செல்வம், உயர்நீதிமன்ற பதிவாளருக்கு 2017 பிப். 8இல் அனுப்பிய புகாரில், அனுமதியில்லாமல் நிறுவப்பட்டுள்ள விநாயகர் கோவிலை அகற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். வழக்குரைஞர்களுக்குள் மோதல் சூழல் ஏற்பட்டதால், 2 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில் பூட்டப்பட்டது.
சில தினங்களுக்கு முன், சென்னைஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி திண்டிவனம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிபதிக்கு, தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவின் பேரில், 6.9.2021 அன்று மாலை மாவட்ட அமர்வு நீதிபதி இளவழகன், நேரில் விசாரணை நடத்தினார். இதில் அனைத்து வழக்குரைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒரு மாதத்திற்குள் நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலை வேறு இடத்தில் வைப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்என வழக்குரைஞர்களிடம் கூறினார்.
சென்னை உயர்நீதிமன்றம், திண்டிவனம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலை 30 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment