தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 1, 2021

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

சென்னை, செப்.1 தமிழ்நாட் டில் சென்னை அடுத்த வான கரம், நல்லூர், பரனூர் சூரப் பட்டு உள்பட 24 சுங்கச்சாவடி களில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

தமிழ்நாட்டில் 6,606 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 5,134 கி.மீ., சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது. மீத முள்ள 1,472 கி.மீ., சாலைகள் ஒன்றிய அரசின் நிதியில், மாநில நெடுஞ்சாலைத் துறை யால் பராமரிக்கப்பட்டு வரு கின்றன. தேசிய நெடுஞ்சாலை களில் பயணிக்கும் வாகனங் களிடம் கட்டணம் வசூலிப்ப தற்காக, 49 இடங்களில் சுங்கச் சாவடிகள் இயங்கி வருகின்றன.

சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை அமைத்த முதலீடு திரும்பப் பெறும் வரை கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். அதற்கு பின்னர் 40 சதவீத சாலை பராமரிப்புக்கான கட் டணம் வசூலிக்கப்பட வேண் டும். ஒவ்வொரு ஆண்டும் 8-10 சதவீத அளவிற்கு சுங்க கட்ட ணங்கள் உயர்த்தப்படுகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட் டில்  உள்ள 24 சுங்கச்சாவடிகளி லும் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி 21 சுங்க சாவடிகளில் 5% முதல் 10% வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் 24 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த் தப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி சமய புரம் சுங்கசாவடி, திருப்பராய்த் துறை (திருச்சி-கரூர்), பொன்னம் பலப்பட்டி (திருச்சி), கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர், தஞ்சை வாழவந்தான் கோட்டை, விருதுநகர் புதூர்பாண்டியா புரம், மதுரை எலியார்பதி, நாமக்கல் ராசம்பாளையம், சேலம் ஒமலூர், நத்தக்கரை, வைகுந்தம், வீரசோழபுரம், சேலம் மேட்டுபட்டி, திண்டுக் கல் கொடைரோடு, தர்மபுரி பாளையம், குமாரபாளையம் விஜய மங்கலம், விழுப்புரம் விக்கிரவாண்டி மொரட் டாண்டி, உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி உள்பட 24 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கார், வேன், ஜீப்புக்கு ஒருமுறை கட்டணம் ரூ.55 ஆகவும், பலமுறை கட்ட ணமாக 85 ரூபாயும், மாத கட் டணமாக 1,710 ரூபாயும் உயர்த் தப்பட்டுள்ளது. இதேபோல் இலகுரக வாகனங்கள் ஒரு முறைக்கு 100 ரூபாயும், பல முறைக்கு 150 ரூபாயும் உயர்த் தப்பட்டுள்ளது.

பல அச்சுகள் கொண்ட வாகனத்திற்கு ஒரு முறை 320 ரூபாயும், பல முறைக்கு 480 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் ஏற்கனவே உள்ள கட்டணங்களை விட தற்போது ரூ.5 முதல் ரூ.20 வரை யில் கட்டண உயர்வு செய்யப் பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு, பல்வேறு கட்சிகள், ஆம்னி பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகன உரிமையா ளர்கள், சரக்கு போக்குவரத்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment