கோவை,செப்.11- கோவை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 5.9.2021 காலை 11.30 மணிக்கு காமராஜ் நகர் கண்ணப்பன் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
வரவேற்புரையை கழக மாவட்ட செயலாளர் கழக செந்தில்நாதன் வழங்க, மண்டல மகளிரணி செயலாளர் ப. கலைச்செல்வி, மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.பிரபாகரன், மாநகர தலைவர் புலியகுளம் க.வீரமணி, மாவட்ட தொழிலாளரணி செயலாளர் வெங்கடாசலம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவை மண்டல செயலாளர் ச.சிற்றரசு அவர்கள் மாவட்ட கழகத்தின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி சிறப்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மருத்துவர் கோபால் திருச்சியில் அமைய உள்ள பெரியார் உலகம் சிறப்பாக அமைந்திட தனது பங்களிப்பாக ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குவதாக அறிவித்தார். தொடர்ந்து மாவட்ட இளைஞரணி தலைவர் ச திராவிடமணி தனது பங்களிப்பாக 10.ஆயிரம் வழங்குவதாக அறிவித்தார்
கூட்டத்தில் பங்கேற்று மண்டல மாணவர் கழக செயலாளர் மு.ராகுல், கோவை மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சு.ஆனந்த சாமி, தொழிலாளர் அணி செயலாளர் முத்துமாலையப்பன், தொழிலாளர் அணி மாவட்ட துணைத்தலைவர் ஆனந்தராசு, மாவட்ட கழக துணை செயலாளர் காளிமுத்து மா.இ.து செயலாளர் வெற்றிச்செல்வன், வ.ராஜேஸ்வரி, மாவட்ட மகளிரணி கவிதா,முத்துமணி ,அருணா, மாவட்ட மாணவர் கழக தலைவர் வெ.யாழினி, த.க.கவுதமன், பொள்ளாச்சி நகர தலைவர் கே.வீரமலை, பொள்ளாச்சி நகர செயலாளர் நாகராசன், வடக்கு பகுதி செயலாளர் மா.கவி கிருஷ்ணன், தெற்கு பகுதி செயலாளர் தெ.புண்ணியமூர்த்தி, மற்றும் சா.சிவகுமார், இரா.இருதயராஜ், திக சுந்தரம், பாரிவள்ளல், பொள்ளாச்சி சிவராஜ், கு.கார்த்தி, கி.செல்வன், ஆ.அருண், சா.ராசா, சி.சந்தோஷ்குமார், வீ.சகுந்தலா, இனியா, கவுசல்யா, எஸ்,வடிவேல் மற்றும் அ.மு.ராஜா ஆகியோர் தந்தை பெரியார் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
பெரியார் பண்ணையின் திராவிட நாற்றுக்களுக்கு பாராட்டு
கோவை மண்டல பெரியாரியல் பயிற்சி வகுப்பில் பங்கேற்று மண்டல அளவில் மூன்றாம் இடம் பிடித்த ரா.அன்புமதி அவர்களுக்கு மாவட்ட கழக தலைவர் ம.சந்திரசேகர் அவர்கள் இரண்டாயிரம் ரூபாய் பரிசும் சான்றிதழையும் வழங்கி சிறப்பித்தார்.தொடர்ந்து பெரியார் பண்ணையின் திராவிட நாற்றுக்களான ரா.ரஞ்சிதா, ம.குகன், பொ.சுதா, செ.பூமதி, சு.சரண்ஆதித்யா , கு.ராம்பிரசாந், வீ.கபிலன், ர.வின்சென்ட், ர.திவ்யா வாசுகி, சீ.மோனிஷா, த.க.யாழினி, உள்ளிட்ட இருபால் மாணவர்களுக்கும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் வழங்கிய சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கலந்துரையாடலில் பங்கேற்ற அனைவருக்கும் அசைவ உணவு மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்து.
வே.தருமன் அவர்கள் இனைப்புரை வழங்கி நிகழ்ச்சியை மிக சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் -1: கோவை மாவட்ட மாணவர் கழக தோழர் தமிழ்ச்செல்வன் பாட்டியும் மகளிரணி தோழர் மங்கைகரசியுடைய தாயாருமான மாசானம்மாள் மறைவுக்கு கமிட்டி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது
தீர்மானம் 2: பெரியாரின் 143 ஆவது பிறந்த நாளை செப்டம்பர் 17 திராவிடர் திருநாளாக கோவை மாவட்டம் முழுவதும் மிகச் சிறப்பாக கழக கொடியேற்றி இனிப்பு வழங்கி கோவையில் உள்ள அனைத்து பெரியார் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மிகப்பெரும் விழாவாக மாவட்ட முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் மிக சிறப்பாக கொண்டாடுவது என கமிட்டி முடிவு செய்கிறது.
தீர்மானம் 3: அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் இறுதி எண்ணமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக பணி நியமன ஆணை வழங்கி தந்தை பெரியார் அவர்களின் இறுதி ஆசையை நிறைவேற்றி தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுதலையும் நன்றியையும் வாழ்த்துகளையும் இக்கமிட்டி தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 4: அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியாரின் கொள்கையை உலகமே அறிந்து வியக்கும் வண்ணம் திருச்சி சிறு கனூரில் அமைய உள்ள தந்தை பெரியார் உலகம் மிகவும் சிறப்பாக அமைந்திட அனைத்து விதமான பணிகளையும் நன்கொடைகளையும் வசூலித்து வழங்கிட கமிட்டி முடிவு செய்கிறது.
தீர்மானம் 5: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளுக்கு உள்ளாக விடுதலை சந்தாவை மிக அதிகமாக திரட்டி வழங்குவது என கமிட்டி முடிவு செய்கிறது. ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிறைவாக மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment