இவை அனைத்தும் தனியார் வசமாவதால் அதை ரயில்வே இனிமேல் பாராமரிக்காது என்பதற்காக 500 ரயில்கள், 7000 ரயில் நிலையங்கள் ரயில்வேக்குச் சொந்தமானவை இல்லை என்று மறைமுகமாக
ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
அப்படி என்றால் அந்த 500 ரயில் மற்றும் 7000 ரயில் நிலையங்களில் பணிபுரியும் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட அதிகாரிகள். பணியாளர்களை அங்கேயே ஒப்பந்த அடிப்படையில் தனியார் அமர்த்திக் கொள்வார்கள் அல்லது திறமையில்லை என்று கூறி அவர்களை நீக்கிவிட்டு புதியவர்களைக் கூட நியமிப்பார்கள். அப்படி என்றால் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களது எதிர்காலம் மற்றும் அவர்களை நம்பியுள்ள குடும்பத்தின் நிலை என்ன ஆவது? இதற்கான பணிப்பாதுகாப்பு உரிமைச்சட்டத்தையும் இந்த ஒன்றிய அரசு ரத்து செய்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment