சென்னை, செப்.1 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வார்டு வாரியாக அந்தந்த உள்ளாட்சி வாக்குச்சாவடி அலுவலர்களால் நேற்று (31.8.2021) வெளியிடப்பட்டது.
இந்த 9 மாவட்டத்தில் 37 லட்சத்து 77 ஆயிரத்து 524 ஆண் வாக்காளர்கள், 38 லட்சத்து 81 ஆயிரத்து 361 பெண் வாக்காளர்கள், 835 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 76 லட்சத்து 59 ஆயிரத்து 720 வாக்காளர்கள் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 13 லட்சத்து 83 ஆயிரத்து 687 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 64 ஆயிரத்து 108 வாக்காளர்களும் உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 11 லட்சத்து 54 ஆயிரத்து 933 வாக்காளர்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 லட்சத்து 61 ஆயிரத்து 770 வாக்காளர்களும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 6 லட்சத்து 81 ஆயிரத்து 731 வாக்காளர்களும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 லட்சத்து 67 ஆயிரத்து 237 வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
நெல்லை-தென்காசி வாக்காளர்கள்
தென்காசி மாவட்டத்தில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 402 வாக்காளர்களும், நெல்லை மாவட்டத்தில் 6 லட்சத்து 73 ஆயிரத்து 868 வாக்காளர்களும், வேலூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 784 வாக்காளர்களும் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment